Mamata Banerjee: நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு
Mamata Banerjee, NITI Aayog meeting: "மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்படாததை குறித்து நான் பேசி கொண்டிருக்கும் போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து என்னை அவமதித்துவிட்டார்கள்"-மம்தா பானர்ஜி
Mamata Banerjee, NITI Aayog meeting: நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9ஆவது ஆட்சிக்குழு கூட்டம் டெல்லியில் இன்று (ஜூலை 27) தொடங்கியது. இதில், மத்திய அமைச்சரகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கெண்டனர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ள அவர், மற்ற முதல்வர்கள் நீண்ட நேரம் பேச அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார்.
"இது அவமானகரமானது. இனி எந்த கூட்டத்திலும் நான் கலந்து கொள்ள மாட்டேன்" என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?
நிதி ஆயாக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “"நான் கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்துள்ளேன். (ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்) சந்திரபாபு நாயுடு பேச 20 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் 10-12 நிமிடங்கள் பேசினர். ஆனால், என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும். கூட்டுறவு கூட்டாட்சி முறை வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற அதிக ஆர்வத்தின் காரணமாக நான் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்." என்று அவர் மேலும் கூறினார்.
மம்தா பானர்ஜியின் மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது என்றும், அவர் பேசும் நேரம் முடிந்துவிட்டது என்று கடிகாரம் காட்டியது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
அகர வரிசைப்படி, மதிய உணவுக்குப் பிறகு அவரது முறை வந்திருக்கும், ஆனால் மேற்கு வங்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளின் பேரில் அவர் ஏழாவது பேச்சாளராக அனுமதிக்கப்பட்டார், ஏனெனில் அவர் சீக்கிரம் கொல்கத்தா திரும்ப வேண்டியிருந்தது.
கூட்டத்தின் போது மத்திய அரசாங்கம் அரசியல் சார்புடைய பட்ஜெட்டை தாக்கல் செய்ததாகவும், மாநிலங்களிடையே மத்திய அரசு ஏன் பாகுபாடு காட்டுகிறது என்றும் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சில மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூட்டத்தில் குறிப்பிட்டதாக மம்தா பானர்ஜி கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா ஆகியவற்றின் கீழ் மேற்கு வங்கத்திற்கு மத்திய நிதி நிலுவையில் உள்ளது என்றும் அவர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்