Wayanad landslides: வானிலை எச்சரிக்கை கொடுத்தும் மக்களை வெளியேற்றாதது ஏன்? கேரள அரசுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Wayanad Landslides: வானிலை எச்சரிக்கை கொடுத்தும் மக்களை வெளியேற்றாதது ஏன்? கேரள அரசுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!

Wayanad landslides: வானிலை எச்சரிக்கை கொடுத்தும் மக்களை வெளியேற்றாதது ஏன்? கேரள அரசுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Jul 31, 2024 09:13 PM IST

Wayanad landslides: நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜூலை 23 அன்று ஒன்பது NDRF குழுக்கள் மையத்தால் அனுப்பப்பட்டன. கேரள அரசு என்ன செய்தது? கேரள அரசு ஏன் மக்களை வெளியேற்றவில்லை? என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

Wayanad landslides: வானிலை எச்சரிக்கை கொடுத்தும் மக்களை வெளியேற்றாதது ஏன்? கேரள அரசுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!
Wayanad landslides: வானிலை எச்சரிக்கை கொடுத்தும் மக்களை வெளியேற்றாதது ஏன்? கேரள அரசுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி!

மேலும் மூன்று நாட்களுக்கு எச்சரிக்கைகள் தொடரும் என்றும், ஜூலை 26 ஆம் தேதி, 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்து உள்ளது. மண் சரிவு சேறும் சகதியுமாக இருக்கும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றும் எச்சரித்ததாக உள்துறை அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்திய அரசின் வானிலை எச்சரிக்கை அமைப்பு குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். தயவுசெய்து மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையைப் படியுங்கள்" என்று கூறினார். 

பல மாநிலங்கள் எச்சரிக்கையை பின்பற்றின

மத்திய அரசின் எச்சரிக்கையை பல மாநில அரசுகள் பின்பற்றியதால், பேரிடர் மேலாண்மையில் உயிர்ச்சேதம் இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார். 

“ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, சுமார் ஏழு நாட்களுக்கு முன்னதாகவே புயல் குறித்த எச்சரிக்கையை அனுப்பியிருந்தோம், துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார். புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இதேபோன்ற எச்சரிக்கை குஜராத் அரசுக்கு அனுப்பினோம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என்று அவர் கூறினார். 

உரிய வானிலை எச்சரிக்கை அமைப்பு உள்ளது 

2014-க்குப் பிறகு இந்திய அரசு முன்கூட்டிய வானிலை எச்சரிக்கை அமைப்பைக் கொண்டுள்ளது என்றும், அதற்காக ரூ. 2000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டு, இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்படும். மழை, வெப்பம், புயல், மின்னல் போன்றவற்றுக்கும் உரிய எச்சரிக்கை அமைப்பு உள்ளது என்று  அமித்ஷா கூறினார்.

ஏன் மக்களை வெளியேற்றவில்லை 

நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜூலை 23 அன்று ஒன்பது NDRF குழுக்கள் மையத்தால் அனுப்பப்பட்டன. கேரள அரசு என்ன செய்தது? கேரள அரசு ஏன் மக்களை வெளியேற்றவில்லை? என அமித்ஷா கேள்வி எழுப்பினார். 

வயநாடு நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணி மற்றும் அதிகாலை 4.10 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் இதுவரை 167க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றுவதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரிழந்த 167 பேரில் 22 பேர் குழந்தைகள் ஆவர். 96 உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், 166 பேரின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததாகவும் அரசு கூறி உள்ளது. மீட்கப்பட்ட 61 உடல் உறுப்புகளில், 49 உடல் உறுப்புகளின் பிரேதப் பரிசோதனை முடிந்து விட்டது. 167 உடல்களில் 75 உடல்கள் உறவினர்கள் அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 78 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இராணுவம், கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றைக் கொண்ட மீட்புக் குழுக்கள், நிலச்சரிவுகளில் சேதமடைந்த அல்லது மண்ணால் மூடப்பட்ட வீடுகளை உடைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.