Chhattisgarh CM: சத்தீஸ்கரின் புதிய முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வு - பின்னணி என்ன?
சத்தீஸ்கரின் முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரின் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரின் அடுத்த முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் பாஜக தெலங்கானா நீங்கலாக, மூன்று மாநிலங்களில் வென்றது. விஷ்ணு தியோ சாயின் பெயர், ஒரு வாரம் கழித்து பல்வேறு ஆலோசனைக்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு தியோ சாய் ஒரு புதிய முகம் என்பதால் அவர் முதலமைச்சர் ரேஸில் இல்லாமல் இருந்தார். சத்தீஷ்கர் மாநிலத்தின் குங்குரி பழங்குடி சமூகத்திற்கு பெரிய அங்கீகாரமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என தேர்தல் நேரத்தில் அமித் ஷா தெரிவித்த நிலையில், தனது வாக்குறுதியை அவர் காப்பாற்றியதற்காகப் பாராட்டப்பட்டார்.
விஷ்ணு தியோ சாய் யார்?: 59 வயதான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரில் ஒரு முக்கிய பழங்குடித் தலைவராக இருந்து வருகிறார். அவருடைய பணி அடிமட்டத்தில் இருந்து மத்திய அமைச்சரவை வரை இருந்தது. அவர் தனது அரசியல் வாழ்க்கையை ஒரு கிராம நிர்வாகியாக தொடங்கி, 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக உயர்ந்தார்.
2019 லோக்சபா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், சட்டசபை தேர்தலில் நிறுத்தப்பட்டார். பாஜகவின் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சாய் மூன்று முறை தலைவராக இருந்தார்.
சாயின் குடும்பப் பின்னணி: சாயின் தாத்தா மறைந்த புத்நாத் சாய் 1947 முதல் 1952 வரை நியமன எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவரது தந்தையின் மூத்த சகோதரர், மறைந்த நர்ஹரி பிரசாத் சாய் ஜன சங்கத்தின் (பாஜகவின் முன்னோடி) உறுப்பினராக இருந்தார். இரண்டு முறை எம்எல்ஏவாக (1962-67 மற்றும் 1972-77) எம்.பி.யாக (1977-79) தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனதா கட்சி அரசாங்கத்தில் மாநில அமைச்சராக பணியாற்றினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9