தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Video Of Mysterious Naked Woman Roaming In Uttar Pradesh

நிர்வாணமாக இரவில் கதவை தட்டும் இளம்பெண்.. பதறவைக்கும் திகில் சம்பவம்!

Divya Sekar HT Tamil
Feb 04, 2023 01:37 PM IST

Uttar Pradesh Naked woman : உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாணமாக இரவில் கதவை தட்டும் இளம்பெண்
நிர்வாணமாக இரவில் கதவை தட்டும் இளம்பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

இவரின் இந்த செயலைக் கண்டு அதிர்ச்த்தியடைந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் அந்த பெண் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்திருந்தனர்.

மேலும் விசாரணையின் போது உள்ளூர் வாசி ஒருவர் அந்த பெண்ணிற்கு 25 வயது இருக்கலாம் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் கதவைத் தட்டி சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து வாகனத்தில் இருவர் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருப்பவர்கள் வெளியில் வராமல் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

பகிரப்பட்ட அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக கதவைத் தட்டுகிறார். பின்பு அங்கிருந்து செல்கிறார். பலரும் அந்த பெண்ணின் நிலையை கண்டு தங்கள் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த பெண் மனநலம் பாதித்தவராக இருக்கலாம் என்று கூறினர். இதுபோல சமூக ஊடகங்களில் மக்கள் பலவிதமான கருத்துக்களைக் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பெண் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் இன்று அறிக்கை வெளியிட்டனர். அதில், ராம்பூர் போலீசார், அந்தப் பெண்ணின் பெற்றோருடன் தொடர்பு கொண்ட பிறகு, அவர் ‘மனநலம்’ பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பரேலியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இனிமேல் இந்த மாதிரி நிலைமை ஏற்படாமல் இருக்குமாறு பெண்ணின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறாக மக்கள் தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். தெருக்களில் பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்