Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Marimuthu M HT Tamil
Oct 03, 2024 09:26 PM IST

Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Metro: சென்னை மெட்ரோ 2ஆம் கட்டப்பணிகளுக்கு ஒப்புதல்.. 3 புதிய வழித்தடங்கள்.. அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இதுதொடர்பாக டெல்லியிலுள்ள மத்திய அமைச்சரவையில் மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘’ விவசாயிகளின் வருமானம் மற்றும் உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் பல கூறுகள் உள்ளன.

அவற்றில் சில கூறுகள் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்கவும், நடுத்தர குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இது இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. ’பிரதம மந்திரி ராஷ்டிர க்ரிஷி விகாஸ் யோஜனா' மற்றும் ‘கிருஷோன்னதி யோஜனா’ ஆகிய இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

ஒரு வகையில் விவசாயிகளின் வருமானத்துடன் தொடர்புடைய அனைத்து திட்டத்திற்கும் ரூ.1,01,321 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான முக்கிய திட்டங்கள்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இது பல கூறுகளைக்கொண்ட மிகப் பெரிய திட்டம் ஆகும். மேலும், பல கூறுகள் தனித்திட்டங்களாக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய விவசாயம்  சார்ந்த எந்த திட்டத்தையும் எந்த மாநிலமும் கொண்டுவந்தால், அது இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும்.

பிரதமர் மோடி எப்போதுமே இந்திய மொழிகளில் கவனம் செலுத்துகிறார். இன்று மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய 5 மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. செம்மொழிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், இந்த மொழிகளின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை மெட்ரோவின் 2-கட்டப்பணிகளுக்கு அனுமதி: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மேலும் சென்னை மெட்ரோவின் 2-ம் கட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 63,246 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை வேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும். சென்னை ஒரு மிக முக்கியமான பொருளாதார மையம் மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றை நாம் அனைவரும் அறிவோம். 2048-ல் சென்னை பெருநகரத்தில் மக்கள் தொகை 1.8 கோடியாக உயர வாய்ப்புள்ளது. எனவே, சென்னை பெருநகரத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பை இப்போதே உருவாக்குவது மிகவும் முக்கியம். அதனால்தான் ஒரு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டது. இது சென்னையில் மக்கள் பயன்படுத்தும் புதிய வெகுஜன போக்குவரத்து வழித்தடங்களை அடையாளம் கண்டு செயல்படுத்துகிறது" என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

மேலும், இதுதொடர்பாக மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், வெளியிட்டுள்ள தகவல் குறிப்பின்படி, சென்னை மாதவரம் முதல் சிப்காட்டுக்கு ஒரு மெட்ரோ வழித்தடமும், சென்னை லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பை-பாஸ் வரை ஒரு மெட்ரோ வழித்தடமும், சென்னை மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு மெட்ரோ வழித்தடமும் உருவாக்கப்படுகிறது. இதற்கான மொத்த மெட்ரோ ரயில் பயணிக்கும் தூரம் 119 கி.மீ. ஆகும். அதில் பூமிக்கு மேல் 64%-ம், பூமிக்கு அடியில் 36 விழுக்காடு மெட்ரோ ரயில் பாதையும் செல்லும் படி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று வழித்தடங்களிலும் சேர்த்து 128 மெட்ரோ ஸ்டேஷன்கள் உருவாக்கப்படவுள்ளன. அதில் 80 மெட்ரோ பாலத்தின்மேலும், 48 பூமிக்கடியிலும் வருகிறது. இந்த திட்டத்தை முடிக்க 30 ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.