Union Budget 2024-25: சரிய போகும் மொபைல் போன்கள் விலை! அடித்து ஆடிய நிர்மலா சீதாராமன்! அடேங்கப்பா இனி வாங்கி குவிக்கலாம்
நிர்மலா சீதாராமன் கூறுகையில், "உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகரிப்பு மற்றும் கடந்த 6 ஆண்டுகளில் மொபைல் போன்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிப்பு ஆகியவற்றுடன், இந்திய மொபைல் துறை முதிர்ச்சி அடைந்து உள்ளது.

Union Budget 2024-25: சரிய போகும் மொபைல் போன்கள் விலை! அடித்து ஆடிய நிர்மலா சீதாராமன்!
மொபைல் போன்களுக்கான அடிப்படை சுங்கவரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது மொபைல் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணி கட்சிகள் ஆதரவு உடன் மூன்றாவது முறையாக பொறுப்பு ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது.
15 சதவீத வரி குறைப்பு
நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, மொபைல் போன்களுக்கான அடிப்படை சுங்க வரியில் (பிசிடி) 15 சதவீதம் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.