பல்கலைக்கழகங்களில் ஒப்பந்த முறையில் நிபுணர்கள்: யு.ஜி.சி., புதிய வழிகாட்டுதல்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பல்கலைக்கழகங்களில் ஒப்பந்த முறையில் நிபுணர்கள்: யு.ஜி.சி., புதிய வழிகாட்டுதல்

பல்கலைக்கழகங்களில் ஒப்பந்த முறையில் நிபுணர்கள்: யு.ஜி.சி., புதிய வழிகாட்டுதல்

I Jayachandran HT Tamil
Oct 01, 2022 11:33 PM IST

'புரொபசர்ஸ் ஆப் பிராக்டிஸ்' என்ற திட்டத்தின் கீழ், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பெற்ற நிபுணர்களை பேராசிரியர்களாக நியமித்துக் கொள்ள, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

<p>யு.ஜி.சி.&nbsp;</p>
<p>யு.ஜி.சி.&nbsp;</p>

யு.ஜி.சி., வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் அறிக்கை: பொறியியல், அறிவியல், மீடியா, இலக்கியம், தொழில் முனைவு, சமூக அறிவியல், நுண்கலைகள், சிவில் சர்வீசஸ் மற்றும் ஆயுதப் படைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள நிபுணர்களை பயிற்சி பேராசிரியர்களாக நியமிக்கலாம்.

இவர்கள் தங்களது துறையில் நிபுணத்துவத்தை நிரூபித்து இருக்க வேண்டும் அல்லது ௧௫ ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். பேராசிரியர்களுக்கான கல்வித் தகுதி அவசியம்இல்லை. இவர்களின் பணி நியமனம், அனுமதிக்கப்பட்ட பதவிகளில் ௧௦ சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

இவர்களது பணிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். விதிவிலக்காக மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கலாம்.இந்த பதவி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை மற்றும் வழக்கமான ஆள் சேர்ப்பை எந்தவிதத்திலும் பாதிக்காது. இதில், ஆசிரியர் பணியில் உள்ளோர் மற்றும் ஓய்வு பெற்றோர் சேர முடியாது. இந்த புதிய நடைமுறை, உலகம் முழுதும் உள்ள பல்கலைக் கழகங்களில் வழக்கமாக உள்ளது.

இதில், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம், ஹார்வர்டு பல்கலை, ஸ்டான்போர்டு பல்கலை, லண்டன் பல்கலை உள்ளிட்டவை அடங்கும். இதேபோல், இந்தியாவில் புதுடில்லி, சென்னை மற்றும் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.