நெட் தேர்வில் ஆயர்வேதா உயிரியல் பாடம் சேர்ப்பு.. UGC NET டிசம்பர் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு!
UGC NET December 2024 : UGC NET டிசம்பர் தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் ஆயர்வேதா உயிரியல் பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இந்த பாடத்திற்கான விரிவான பாடத்திட்டத்தை ugcnetonline.in இல் சரிபார்க்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து ஜூன் 25 அன்று நடைபெற்ற ஆணையத்தின் 581 வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. யுஜிசி நெட் டிசம்பர் தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயர்வேதா உயிரியல் பாடம் சேர்ப்பு
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். இந்த தேர்வுக்கான தொகுதியில் தற்போது தமிழ், வரலாறு, பொருளியல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.
