Top 10 News: இமாச்சல், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மழை! மேற்குவங்க வாக்கு எண்ணிக்கை! விஜய் ரசிகர் மன்றத்தினருடன் சந்திப்பு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Top 10 News: இமாச்சல், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மழை! மேற்குவங்க வாக்கு எண்ணிக்கை! விஜய் ரசிகர் மன்றத்தினருடன் சந்திப்பு!

Top 10 News: இமாச்சல், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மழை! மேற்குவங்க வாக்கு எண்ணிக்கை! விஜய் ரசிகர் மன்றத்தினருடன் சந்திப்பு!

Priyadarshini R HT Tamil
Jul 11, 2023 05:47 PM IST

Top 10 News (11.07.2023) : உள்ளூர் முதல் உலகம் வரை, தேசம் முதல் விளையாட்டு வரை இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள்.

இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்

• மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை

வன்முறை நடைபெற்ற மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 19 மாவட்டங்களில் 696 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 18 பேர் வாக்குப்பதிவு நடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.

5.67 கோடி மக்கள் 2.06 லட்சம் வேட்பாளர்களை 73,887 இடங்களுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள்.

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள், மம்தாவுக்கும், பாஜகவுக்கு லிட்மஸ் தேர்வாகும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க தேர்தல்களில் வன்முறை புதிது கிடையாதுதான், ஏனெனில் கடந்த தேர்தலில் 2018ம் ஆண்டு 12 பேர் தேர்தல் வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தார்கள்.

• டெல்லியில் அதிகனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்

வரும் நாட்களில் டெல்லியில் அதிகன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று வானம் மேகமூட்டத்துடனும் நகரின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• இமாச்சல பிரதேசத்தில் கடும் மழையால் இரண்டு வாரங்களில் 72 பேர் உயிரழ்ந்தனர். 94 பேர் படுகாயமடைந்தனர். காணாமல்போன 8 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

• இமாச்சல பிரதேசத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடியது வெள்ளம். பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

• டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் பருமழை, அம்பாலாவில் வெள்ளத்தில் சிக்கிய 700 மாணவிகளை ராணுவத்தினர் கயிறு கட்டி மீட்டனர்.

• காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் – 4 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை செய்கிறது.

தமிழகம்

• தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

• சாலையோரத்தில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாதோரையும் சேர்த்திட தமிழக அரசு விரிவான முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

• பிரிவினை ஏற்படுத்தும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட புகாரில் கனல்கண்ணன் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டார். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் திருமாவளவன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து அமைப்பின் நிர்வாகி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

• பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி சீர்காழி பருத்தி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மழையில் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு இழப்பீடு கோரி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

• ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். அரசியலுக்கு வர ஆயத்தமாக உள்ளதாக கூறப்படும் நிலையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

• 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறைந்த விலையில் பருப்பு விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

• அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரனைக்கு வருகிறது.

• திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.