Top 10 News: விஜயகாந்த் பிறந்த நாள் முதல் டொனால்ட் ட்ரம்ப் கைது வரை.. முக்கிய செய்திகள்
உலகக் கோப்பை செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
• நடிகர் விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்களை சந்திக்கிறார்.
•அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
•தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 25) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 461 ஆவது நாளாக அதே விலையிலேயே விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
•காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது.
• விக்ரம் லேண்டர் தரையிறங்கிய போது எடுத்த நிலவின் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகரத் துவங்கி கருவிகள் அனைத்து சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
•கிழக்கு லடாக்கில் எல்லை கோட்டை மதித்து செயல்பட வேண்டும் என பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
•அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கைது டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்ட 20 நிமிடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் மோசடி குறித்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
•உலகக் கோப்பை செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
•ஆகஸ்ட் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தட சேவை மாற்றப்பட உள்ளது. வேளச்சேரி சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில்கள் இயக்கப்படும் என கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
•வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையில் குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தந்தை மகன் தகராறின் போது மது போதையில் இருந்த மகன் சரத் குமார் தந்தை தேவராஜை கத்தியால் குத்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.