தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today's Rasi Palan : வெளியூர் பயணம் மேற்கொள்ள உள்ள கன்னி ராசியினர்! இன்றைய ராசி பலன்கள்

Today's Rasi Palan : வெளியூர் பயணம் மேற்கொள்ள உள்ள கன்னி ராசியினர்! இன்றைய ராசி பலன்கள்

Priyadarshini R HT Tamil
Jun 03, 2023 06:13 AM IST

Today's Rasi Palan : இன்று விருச்சிக ராசியில் விசாகம், அனுஷம் நட்சத்திரங்களில் சந்திரனின் பயணம் நடக்க உள்ளது. இங்கு சந்திரன் சூரியனுடன் சமசபம யோகத்தை ஏற்படுத்துகின்றனர். கன்னி ராசியினருக்கு இன்று வெளியூர் பயணம் செய்ய நேரிடும். மேஷம், மிதுனம் உள்ளிட்ட ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும்.

இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்

மேஷம் - நிதானத்துடன், கோபப்படாமல் நடந்துகொள்வது நல்லது. கடின முயற்சியால் இலக்கை அடைவீர்கள். வீட்டிலிருக்கும் பல பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. இன்று பிள்ளைகள் படிப்பு சிறப்பாக இருக்கும். சமூகம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. கடன் கொடுத்த பணத்தை திரும்பப்பெற நேரம் சாதகமாக இருக்காது. அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம் - நெருங்கிய சொந்தங்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் கலந்தாலோசித்து முடிவெடுப்பது, தீர்வு காண்பது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். திருமண உறவில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும் இருப்பினும் நல்ல தீர்வு காண்பீர்கள். ஒருவரை அதிகமாக நம்புவதால் தீங்கு ஏற்படலாம். இயந்திரம் அல்லது தொழில்நுட்பம் தொடர்பான வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம் - மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியும். உங்களுக்கு விருப்பமான வேலைகளிலும், தகவல் தரும் புத்தகங்களைப் படித்தல் என இனிமையாக நாள் கழியும். நிதித் தடைகள் இருக்கலாம். எதையும் செய்வதற்கு முன் கவனம் தேவை. வியாபாரத்தில் சில பிரச்னைகள் வரலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் தங்களைத் தாங்களே சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

கடகம் – சொத்து, வாகனம் வாங்க முயல்பவர்களுக்குச் சாதகமான நாள். ஆன்மிக நிகழ்வுகளிலும், சமூகம் சார்ந்த விஷயங்களிலும் பங்கேற்பீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும், அதே சமயம் செலவும் அதிகரிக்கும். உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் தொடர்பான விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். இதனால் மன உளைச்சலில் இருப்பீர்கள். எந்த புதிய வேலையையும் யோசிக்காமல் தொடங்காதீர்கள். வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சில குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்படலாம்.

சிம்மம் - எந்த விஷயத்திலும் நிதானத்துடன் நல்ல சிந்தனை வேண்டும். கடினமான சூழ்நிலைகளிலும் சாதகமான மாற்றங்களைக் காணலாம். சற்று அதிகமாக இருக்கும் பணவரவு, சிறப்பாக இருந்தாலும் செலவுகளும் கட்டுப்படுத்துவது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.

கன்னி - திட்டமிட்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். அலட்சிய மனோபாவமும், முறையற்ற வழியிலும் எந்தவொரு பணியிலும் ஈடுபட வேண்டாம். கவனமாக இருக்கவும். இளைஞர்கள் தங்கள் தொழில் போட்டியில் வெற்றி பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வேலை தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும்.

துலாம் - மங்களகரமான நாள். வீட்டில் உள்ள பெற்றோர், பெரியவருக்கும், சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய மனப்பான்மையுடன் இருப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் முழு கவனம் செலுத்தி செயல்பட நல்ல லாபம் கிடைக்கும். நிதி விஷயங்களில் அதிக கவனம் தேவை. சமூகம் சார்ந்த வேலைகளில் கவனமாக இருக்கவும். ஏனெனில் சில அவதூறுகளைச் சந்திக்க நேரிடும். கணவன்-மனைவி இடையே நல்ல புரிதல் உணர்வு இருக்கும்.

விருச்சிகம் - நேர்மறையான அணுகுமுறையால் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிட்டும். குழந்தைகளைப் பற்றிய நல்ல செய்திகளைப் பெறலாம். உறவினர் அல்லது நண்பரின் ஆலோசனையை நம்பாதீர்கள். உங்கள் சுய சிந்தனையுடன் முடிவெடுக்கவும். இன்று தகுந்த ஆலோசனை இல்லாமல் எங்கு முதலீடு செய்வதை தவிர்க்கவும். வியாபாரம் பெருக்குவதற்கு குறித்து திட்டமிடுதல் நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

தனுசு - சில காலமாக தாமதமாக இருந்த வேலை சிறப்பாக முடிக்க கூடிய நாள். உங்கள் செயல்பாடுகளுக்கு நல்ல வெற்றி ஏற்படும். உங்கள் திறமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி உங்களை நிரூபிக்க கூடிய நாள். அதீத வைராக்கியமும், அடம்பிடித்தாலும் உங்கள் செயல்பாட்டை அழித்துவிடும். கோபமும், மனக்கிளர்ச்சியையும் கட்டுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கை சிறப்பாக அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டிய நேரம். குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல இணக்கம் இருக்கும்.

மகரம் - மாணவர்கள் கல்வி சார்ந்த விஷயங்களில் சிறப்பாக செயல்படுவார்கள். மனம் நிம்மதியாக உணர்வார்கள். சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பதை தவிர்க்கவும். கவனமாக இருக்கவும். போட்டியை சந்திக்க நேரிடும். சில மன கஷ்டம் தரக்கூடிய நிகழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கும்பம் – தங்கள் குழந்தைகளின் கல்வி, உங்களின் தொழில் சம்பந்தமாக எந்த முக்கிய முடிவையும் எடுக்க சிறந்த நாள். பரம்பரைச் சொத்து அல்லது எந்த வகையான தகராறும் இன்று தீர்க்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உறுதுணையாக இருப்பீர்கள். எந்தவொரு கெட்ட பழக்கம் அல்லது எதிர்மறையான செயல்பாடுகளிடமிருந்து விலகி இருங்கள்.

மீனம் - எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை உங்களுக்கு இருக்கும். சமூக மற்றும் குடும்பத்தில் கவுரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் பரஸ்பர அன்பும், ஆதரவும் இருக்கும். தளராத மனப்பான்மையுடன் எந்த ஒரு வேலையும் செய்வதால் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றி பெற சரியான திட்டமிடலும், யோசனையும் தேவை.