தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Tirupathi Temple Hundial Collection Expected To Cross Rs.1,500 Crore In Current Financial Year

Tirupathi: இதுவரை இல்லாத அளவு அதிக உண்டியல் காணிக்கை… எவ்வளவு தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 03, 2023 01:35 PM IST

நடப்பு நிதி ஆண்டான 2022-23இல், ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1,500 கோடி வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1,500 கோடி வசூலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது
திருப்பதி ஏழுமலையான கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1,500 கோடி வசூலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி, ஏப்ரல் மாதம் ரூ. 126 கோடி 65 லட்சம்,மே மாதம் ரூ. 130 கோடி 29 லட்சம், ஜூன் மாதம் ரூ. 123 கோடி 76 லட்சம், ஜூலை மாதம் ரூ. 139 கோடி 75 லட்சம், ஆகஸ்ட் மாதம் ரூ. 138 கோடி 34 லட்சம், செப்டம்பர் மாதம் ரூ. 122 கோடி 19 லட்சம், அக்டோபர் மாதம் ரூ. 122 கோடி 80 லட்சம், நவம்பர் மாதம் ரூ. 125 கோடி 30 லட்சம், டிசம்பர் மாதம் 123 கோடி 16 லட்சம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து 2023ஆம் ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் ரூ. 123 கோடி 7 லட்சம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதன்மூலம் கடந்த 10 மாதங்களில் வரை ரூ. 1,275 கோடியே 31 லட்சம் தற்போது வரை காணிக்கையாக வருமானம் கிடைத்துள்ளது.

இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு ரூ. 100 கோடி மேல் அதிக தொகையை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இன்னும் நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் வரும் காணிக்கையை கணக்கிட்டால் ரூ. 1,500 கோடி வரை வருமானம் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

IPL_Entry_Point