Hiroshima: ஜப்பான் பேரழின் கதை..ஹிரோஷிமா நினைவு தினம்!
1945 ஆகஸ்ட் 6ம் நாள் திடீரென சின்னப்பையன் என்ற அணு குண்டை வீசியது அமெரிக்கா.
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நேச நாடுகள் வெற்றி வாகை சூடிய நேரம். ஜெர்மனி தோல்வியுற்ற நிலையில், ஜப்பான் மட்டும் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளாததால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே நாங்கள் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகளை வீசினோம் என்று அமெரிக்கா கூறியது. ஆனால், அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை, தன்னுடைய வலிமையை நிலைநிறுத்துவதற்காக திட்டமிட்டே குண்டு வீசியது. அது சர்வதேச அரங்கை அச்சுறுத்த இன்றும் பயன்பட்டு வருகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். என்னதான் நடந்தது ஹிரோஷிமாவில்... இந்த தினத்தில் திரும்பி பார்க்கலாம்.
1945 ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் வழக்கம் போல் தன் பணிகளில் இருந்தது. அன்றுகாலை இயல்பாக கண்விழித்த அப்பகுதி மக்களுக்கு அந்த நாள் இப்படி வரலாற்றின் சோக தழும்புகளை தாங்கி நிற்கும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அமெரிக்காவில் முதன் முதலாக அணு ஆயுதம் தயாரிக்கப்பட்ட கால கட்டம் அது. இத்தாலியும் ஜெர்மனியும் தோல்வியை நெருங்கி கொண்டிருந்தன. நேச நாடுகளின் கரம் ஓங்க தொடங்கியது. அமெரிக்காவின் நேரடி எதிரியாக கருதப்பட்ட ஜப்பான் போரின் முக்கிய சக்தியாக உருவாக தொடங்கியது. ஜப்பான் ஒற்றை நாடாக நேச நாடுகளை கலங்கடித்து கொண்டிருந்தது. அதே சமயம் அமெரிக்கா வல்லாதிக்கத்தை நிரூபிக்க வேலை செய்து கொண்டிருந்தது. அதற்கு மேன் ஹார்ட்டன் பிராஜெட் என்ற பெயரில் ரகசியமாக அணு ஆயுத உருவாக்கத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அமெரிக்காவை போல ஜப்பானின் நோக்கமும் வல்லரசு என்ற பாதைதான்.
ஜப்பான் பசுபிக் கடல் பிராந்தியத்தின் பார்ல் துறைமுகத்தில் நடத்திய தாக்குதலில் அமெரிக்க போர்படைத்தளம் தகர்த்தெறியப்பட்டது. இதில் போர்க்கப்பல்கள் சிதறடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா ஜப்பானை பழிவாங்க லிட்டில் பாய் (சின்னப்பையன்) என்ற அணுகுண்டை வீச திட்டமிட்டது. இதையடுத்து 1946 ஜூலை 26ம் தேதி தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு பாஸ்டன் அறிக்கை வழியாக ஜப்பானிற்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா. ஆனால் தொடர்ந்து போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்து 1945 ஆகஸ்ட் 6ம் நாள் திடீரென சின்னப்பையன் என்ற அணு குண்டை வீசியது அமெரிக்கா.
சுமார் 4 லட்சம் மக்கள் வாழ்ந்த ஹிரோஷிமா நகரில் 540 மீட்டர் உயரத்தில் லிட்டில் பாய் அணுகுண்டு வீசப்பட்டது. இதில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கண்களை குருடாக்கும் ஒரு மாபெரும் நெருப்புக் கோளம் வான்வெளியில் தோன்றி 900 அடி தூரத்திற்கு பரவியது. அந்த நகரில் காற்றின் வெப்ப நிலையோ சுமார் 4000 சதவிகிதம் உயர்ந்தது. மணிக்கு 400 கி,மீட்டர் வேகத்தில் தீ பரவியது. 15 வினாடிகளில் 12000 மீட்டர் உயரத்திற்கு ராட்சச கதிர்வீச்சு புகைமண்டலம் எழுந்து நின்றது. 2000 அடிகளுக்கு மேல் தீ கொழுந்து விட்டு எறிந்தது . அன்றைய தேதியில் ஹேரோஷிமாவில் இருந்த சுமார் 75000 கட்டிடங்களில் 70 சதவிகித கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
குண்டு வெடிப்பினால் உண்டான அதிர்வால் பத்து மைல் தொலைவில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் கூட நொறுங்கின. மேலும் இந்த அதிர்வு 37 மைல் தொலைவுக்கு உணரப்பட்டது. குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து 4.4 மைல் தொலைவில் இருந்த இரும்பு உள்ளிட்ட எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த அதிர்வு பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவை முற்றிலுமாக அழித்து விட்டது. சின்னப்பையன் சேட்டை ஹிரோஷிமாவை 3 நாட்கள் நின்று எரித்து நாசமாக்கியது. குண்டு வீச்சில் பலியானவர்களை விட உயிர் பிழைத்தவர்களின் நிலை கொடூரமாக மாறி இருந்தது. அனைவரும் வாந்தி, தலை சுற்றல், ரத்தப் போக்கு, முடி உதிர்வு, தீக்காயங்கள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாகினர். குண்டுவீச்சினால் ஜப்பானின் பிற பகுதிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் நடந்த சம்பவத்தின் கோரம் உலகத்திற்கு புலனாகவில்லை. குண்டு வெடித்து 16மணி நேரம் கழித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்தே ஜப்பான் தலைமையக அதிகாரிகளுமே குண்டுவீச்சின் தன்மையை உணர்ந்தனர். ஆனால் ஜப்பான் தன் இழப்பை முழுவதும் உள்வாங்குவதற்கு இடம் தராத அமெரிக்கா ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி பகுதியில் (பேட் மேன்) குண்டு மனிதன் என்று பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது. இதில் மட்டுமே சுமார் 40 ஆயிரம் உயிரிழந்தனர்.
உலக நாடுகள் இன்றும் ஹிரோஷிமா நாகசாகியின் கோரத்தை மறக்க வில்லை. ஹிரோஷிமாவில் குண்டு வீச்சு நடந்து இன்றோடு 78ஆண்டுகள் கடந்து விட்டது. அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுக்கு பின் ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்த ஐன்ஸ்டின் மிகவும் கவலை கொண்டார். அவர் உயிரிழக்கும் தறுவாயில் தான் எழுதிய கடிதத்தின் விளைவாகவே அமெரிக்கா அணுகுண்டை தயாரித்தது. ஆம் ஜெர்மனி அணுகுண்டு தயாரிப்பில் வெற்றி பெற்றால் உலகை தன்வசப்படுத்தி விடும். அதனால் அமெரிக்க அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு ஐன்ஸ்டீன் மனு அளித்திருந்தார்.
இதனால் நான் பெரிய தவறு இழைத்துவிட்டேன் வருந்தினார். வாழ்நாள் முழுவதும், அறிவியல் மனிதகுல மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் இன்றுவரை நிறைவேறவில்லை என்பதற்கான உதாரணம் இன்றும் உலகநாடுகள் அணு ஆயுத தயாரிப்புகளில் ஈடுபடுவதும் போர்களில் அதை பயன்படுத்துகிறது என்பதும்தான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்