வாழை இலையில் குடை.. பள்ளி செல்ல 15 கி.மீ. நடை.. வறுமையில் பயின்று இந்திய குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணனின் கதை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  வாழை இலையில் குடை.. பள்ளி செல்ல 15 கி.மீ. நடை.. வறுமையில் பயின்று இந்திய குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணனின் கதை

வாழை இலையில் குடை.. பள்ளி செல்ல 15 கி.மீ. நடை.. வறுமையில் பயின்று இந்திய குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணனின் கதை

Marimuthu M HT Tamil
Oct 27, 2024 07:04 AM IST

வாழை இலையில் குடை.. பள்ளி செல்ல 15 கி.மீ. நடை.. வறுமையில் பயின்று இந்திய குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணனின் கதையினைப் படிக்கலாம்.

வாழை இலையில் குடை.. பள்ளி செல்ல 15 கி.மீ. நடை.. வறுமையில் பயின்று இந்திய குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணனின் கதை
வாழை இலையில் குடை.. பள்ளி செல்ல 15 கி.மீ. நடை.. வறுமையில் பயின்று இந்திய குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணனின் கதை

யார் இந்த கே.ஆர். நாராயணன்?:

கே.ஆர்.நாராயணன் கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூர் என்னும் ஊர் அருகிலுள்ள பெரும்தானம் என்னும் குக்கிராமத்தில் 7 குழந்தைகளில் 4ஆவது குழந்தையாக 1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி பிறந்தவர்.

இவரது தந்தையின் பெயர் கோச்சேரில் ராமன் வைத்தியர், தாய் புன்னத்துறைவீட்டில் பாப்பியம்மா ஆவார். இவரது தந்தை ராமன் வைத்தியர், ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த மருத்துவராகத்திகழ்ந்தார். இவரது குடும்பம், பரவர் என்னும் பட்டியலினத்தைச் சார்ந்தது. கே.ஆர்.நாராயணனுடன் வாசுதேவன், நீலகண்டன், கவுரி, பாஸ்கரன், பார்கவி, பாரதி ஆகிய சகோதர - சகோதரிகள் பிறந்து இருக்கின்றனர்.

வாழை இலைகளைக் குடையாக்கி கல்வி பயின்றவர்:

ஐந்தாம் வகுப்பு வரை, குறிஞ்சித்தனத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்ற கே.ஆர். நாராயணன், அதன்பின், உழவூரில் உள்ள லூர்து பள்ளியில் கல்வி பயின்றார். இதற்காக தினமும் 15 கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி பயின்றார். மிக வறுமையில் படித்த கே.ஆர். நாராயணனுக்கு கேரளத்தின் பெருமழைகளில் இருந்து தப்ப குடைகள் வீட்டில் காசு இல்லை. அப்படி இருக்கும்போது வாழை இலைகளை வெட்டி, தன் தலை நனையாமல் வைத்துக்கொள்ளும்படி பிடித்துக்கொண்டு சென்று கல்வி பயின்றார், கே.ஆர்.நாராயணன். பல நேரங்களில் கட்டணம் செலுத்த முடியாததால், வகுப்பறைக்கு வெளியே நின்று பாடங்களை அடிக்கடி கேட்டு படித்தார், கே.ஆர்.நாராயணன். புத்தகங்கள் வாங்க காசில்லாத சூழலில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து மூத்த சகோதரர் கே.ஆர்.நீலகண்டன், பிற மாணவர்களிடம் நோட்டுப்புத்தகங்களைக் கடன் வாங்கி நகல் எடுத்து கே.ஆர். நாராயணனிடம் கொடுத்துப் படிக்கச் செய்தார்.

அதன்பின், குருவிலங்காடு என்னும் ஊரிலுள்ள புனித மேரி உயர் நிலைப்பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளிப் படிப்பை கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரிப் படிப்பையும், திருவாங்கூர் அரச குடும்பத்தின் உதவியோடு படித்தார்.

கல்லூரிப் படிப்பில் கிடைத்த அங்கீகாரம்:

பின்னர், நாராயணன் திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ மற்றும் எம்.ஏ ஆகியவற்றில் ஆங்கில இலக்கியத் துறையில் தேர்ச்சி பெற்றார். அதிலும் பி.ஏ.வில் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

சிறுவயதில் இருந்து கல்விக்காக போராடிய காரணத்தால்,எம்.ஏ. படிக்கும்போது பல்கலைக்கழகத்தில் முதல் இடம்பெற்றார், நாராயணன். இதன்மூலம், திருவிதாங்கூரில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பட்டியலினத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இக்காலகட்டத்தில் குடும்பத்தின் பொருளதார சீர்குலைவை சரிசெய்ய வேலை தேடி, டெல்லி சென்றார். அங்கு தி இந்து மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய பத்திரிகைகளில் மொத்தமாக ஒருவருடம் பணியாற்றினார்.

அதன்பின், ஜே.ஆர்.டி. டாடாவின் ஸ்காலர்ஷிப்பை 1944ல் வென்ற கே.ஆர். நாராயணன், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்துறையில் பட்டம்பெற வெளிநாடு செல்கிறார். அப்போது இவருடன் படித்த வி.கே. கிருஷ்ண மேனன், வீராசாமி ரிங்கடா(பிற்காலத்தில் மொரிசியஸின் முதல் ஜனாதிபதி), பிர்ரே ட்ருடே(பிற்காலத்தில் கனடாவின் பிரதமர்) ஆகியோரின் நெருங்கிய நண்பராகின்றார்.

பேராசிரியர் செய்த உதவி:

1948-ல் லண்டனில் இருந்து கே.ஆர்.நாராயணன் கிளம்பும்போது புகழ்பெற்ற பேராசிரியர் லாஸ்கி என்பவர், நேருவிடம் கே.ஆர்.நாராயணன் பற்றிய அறிமுகக் கடிதத்தை எழுதி, அவரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். பின், இந்தியா திரும்பியதும் நேருவைச் சந்தித்த கே.ஆர்.நாராயணனுக்கு அந்த கடிதமும் அவரது உரையாடலும் பிடித்துப்போக, இந்திய வெளியுறவுத்துறையில் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். அதன்பின், பல்வேறு நாடுகளில் பணிபுரிந்தார். அவ்வாறு மியான்மரில் பணிபுரிந்தபோது தான், அவரது வருங்கால மனைவி மா டிண்ட்டைச் சந்தித்தார். பின் இருவரும் 1951-ல் டெல்லியில் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

பிறகு, இந்திரா காந்தியின் வேண்டுகோளின்படி, அரசியலில் நுழைந்த கே.ஆர்.நாராயணன் மூன்று பொதுத்தேர்தல்களில் வென்றார். பின், பிரதமர் ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார். அதன்பின், 1992ஆம் ஆண்டு முதல் 1997 வரை நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.

இப்படி பலருக்கும் முன்னுதாரணமாய் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்தநாளில் அவரை வணங்குவதில் மகிழ்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.