தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Telangana: ஹைதராபாத்தில் தமிழ்வழிக் கல்வி பள்ளிகள் திறக்க கோரிக்கை - ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு

Telangana: ஹைதராபாத்தில் தமிழ்வழிக் கல்வி பள்ளிகள் திறக்க கோரிக்கை - ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் மனு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 02, 2024 08:45 AM IST

தமிழ்வழிக் கல்வி பள்ளிகள் ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்க வேண்டும் என தெலங்கானா தமிழ் சங்கத்தின் பிரதிநிதிகள் சார்பில் தெலங்கானா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் தமிழ்வழிக் கல்வி பள்ளிகள் திறக்க தெலங்கானா தமிழ் சங்கம் சார்பில் கோரிக்கை
ஹைதராபாத்தில் தமிழ்வழிக் கல்வி பள்ளிகள் திறக்க தெலங்கானா தமிழ் சங்கம் சார்பில் கோரிக்கை

தெலங்கானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனை, தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் வைத்து சந்திப்பு நிகழ்த்தினர். அப்போது ஹைதரபாத்தில் தமிழ்வழிக் கல்வியுடன் பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தமிழர்களின் கலாச்சார மற்றும் சமூக மையமாக விளங்குவதற்கு தமிழ் பவன் கட்டுவதற்கு நிலம் ஒதுக்க வேண்டும். இந்த தமிழ்பவன் மூலம் தமிழ் கலாச்சரம், மொழி, பாரம்பரியத்தை மேம்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்வழிக் கல்வி பள்ளிகள்

ஹைதராபாத்தில் செயல்பட்டு வந்த தமிழ் வழிக்கல்வி பள்ளிகள் தற்போது மூட்டப்பட்டதால் வேலை நிமித்தமாக இங்கு குடிபெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளின் தமிழ் வழிக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அந்த பள்ளிகளை மீண்டும் தொடங்க வேண்டும்.

ரயில் நீடிப்பு சேவை

அதேபோல், ஹைதராபாத் - சென்னை இடையே நாள்தோறும் இயங்கிவரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை தமிழ்நாட்டின் முக்கிய கோயில் நகரங்களான சிதம்பரம், கும்பகோனம், தஞ்சாவூர் மற்றும் மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீடிக்க வேண்டும். இதன் மூலம் அந்த நகரங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் எளிதாகும்"

ட்ரெண்டிங் செய்திகள்

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

இந்த மனுவை பெற்றுக்கொண்ட தெலங்கானா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த கோரிக்கைளை உரிய முறையில் பரீசிலனை செய்து அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட தெலங்கானா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த கோரிக்கைளை உரிய முறையில் பரீசிலனை செய்து அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின்போது தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் போஸ், பொதுசெயலாளர் ராஜ்குமார் உள்பட சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தமிழர்களை இணைக்கும் தெலங்கானா தமிழ்ச் சங்கம்

தெலங்கானா பகுதியில் வாழும் தமிழ் மக்கள் ஒன்றினைக்கும் விதமாக தெலங்கானா தமிழ்ச் சங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஹைதராபாத் உள்பட தெலங்கானா மாநிலத்தில் பிற பகுதிகளில் வாழும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்கள்.

அத்துடன் நீண்ட காலமாக தெலங்கானாவில் வசித்து வருபவர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த சங்கத்தின் சார்பில் தமிழ் வகுப்புகள், கல்வி தொடர்பான முன்னெடுப்புகள் உள்பட பல்வேறு விஷயங்கள் தமிழ் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பொங்கல், மகளிர் தினம் என கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது ஆன்லைன் மூலம் தமிழ் கற்றல் பயிற்சி இருந்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழ் பள்ளி நிறுவவதற்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.