Tamil Live News Updates : ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இறக்கவில்லை - அமைச்சர் உதயநிதி
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tamil Live News Updates : ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இறக்கவில்லை - அமைச்சர் உதயநிதி

இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

Tamil Live News Updates : ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இறக்கவில்லை - அமைச்சர் உதயநிதி

06:11 PM ISTJun 04, 2023 08:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
06:11 PM IST

இன்றைய (04.06.2023) செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்

Sun, 04 Jun 202302:30 PM IST

ஒடிசாவில் இருந்து கொல்கத்தா செல்ல இலவச பேருந்துகள் 

ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச சேவை வழக்க அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். புரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய பகுதிகளில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பேருந்துகள் இயக்கம் 

Sun, 04 Jun 202301:49 PM IST

’ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும்’ ரயில்வே அமைச்சர் பேட்டி

ஒடிசாவில் இதுவரை 275 பேர் உயிரிழந்த பாலசோர் ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.

Sun, 04 Jun 202301:14 PM IST

ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இறக்கவில்லை - அமைச்சர் உதயநிதி

ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 8 பேரின் தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேரின் தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர் என ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sun, 04 Jun 202312:19 PM IST

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 3 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களில், 8 பேரின் நிலை தெரியாமல் இருந்த நிலையில், அதில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 04 Jun 202312:18 PM IST

மெரினாவில் காதல் ஜோடிகள் மீது தாக்குதல்

சென்னை மெரினா கடற்கரை சாலையில், மதுபோதையில் காதல் ஜோடியை தாக்கி வழிப்பறி செய்ய முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டது. காதல் ஜோடியை காப்பாற்றி அந்த கும்பலை பிடிக்க உதவிய பெண் காவலர் கலாவிற்கு உயர் அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Sun, 04 Jun 202311:32 AM IST

ஒடிசா ரயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ரயில்களிலும் கவாச் பாதுகாப்பு அம்சம் பொருத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 04 Jun 202311:03 AM IST

சென்னையில் நடந்த ‘பராசக்தி’ படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வு குறித்து கனிமொழி எம்.பி  நெகிழ்ச்சி!

கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘பராசக்தி’ திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டோம். நவீனத் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும், முற்போக்கு கலை வடிவத்திற்கும் சான்றாக இருக்கும் பராசக்தி, இன்னும் எத்தனை காலமானாலும் புதுமை குறையாது ஆச்சரியமூட்டும்

Sun, 04 Jun 202310:42 AM IST

தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ரெட்டி திருமண புகைப்படங்கள்!

Sun, 04 Jun 202309:57 AM IST

காவலர் கலாவிற்கு உயர் அதிகாரிகள் பாராட்டு

சென்னை மெரினா கடற்கரை சாலையில், மதுபோதையில் காதல் ஜோடியை தாக்கி வழிப்பறி செய்ய முயன்ற ரவுடி கும்பலிடம் இருந்து அவர்களை காப்பாற்றி ரவுடிகளை பிடிக்க உதவிய காவலர் கலாவிற்கு உயர் அதிகாரிகள் பாராட்டு

Sun, 04 Jun 202309:42 AM IST

விபத்து அன்று என்ன நடந்தது? - பிரபல யூடியூபர் இர்ஃபான் விளக்கம்!

Sun, 04 Jun 202309:28 AM IST

ஒடிசா விபத்து - 8 தமிழர்களின் நிலை என்ன? 

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் நிலை இதுவரை தெரியப்படாத நிலையில், அவர்கள் விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது!

பட்டியலில் உள்ளவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1070

மொபைல் எண்: 9445869843

 

 

 

Sun, 04 Jun 202309:03 AM IST

மத்திய அமைச்சர் பயணித்த விமானத்தில் இயந்திர கோளாறு

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. எனினும், துரிதமாக தரையிறக்கியதால் பயணிகள் உயிர்தப்பினர். இந்த விமானத்தில் மத்திய அமைச்சர் ராமேஸ்வர் உள்பட 150 பயணிகள் இருந்தனர்.

Sun, 04 Jun 202308:41 AM IST

'ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்'

'ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்'-என திருமாவளவன் வலியுறுத்தினார்.

Sun, 04 Jun 202308:38 AM IST

ரயில் விபத்து அப்டேட்

"ரயில் விபத்தில் பலியான 88 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது"  என ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா அறிவித்துள்ளார்.

Sun, 04 Jun 202308:19 AM IST

அறுவை சிகிச்சை பின் தோனி

அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது போன்ற அந்தப் புகைபடம் உள்ளது. இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றன்ர.

Sun, 04 Jun 202307:49 AM IST

பாஜகவிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது-காங்கிரஸ் தாக்கு

ஒடிஸா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும். ஆனால், பாஜகவிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Sun, 04 Jun 202307:47 AM IST

குஜராத்தில் சாலை விபத்து-3 பேர் பலி

குஜராத் மாநிலம், வதோதராவில் டிரக்கும் டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இரு வாகனங்களும் மோதியதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஓட்டுநர்கள் உள்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

Sun, 04 Jun 202307:24 AM IST

தொடர்பு கொள்ள இயலாத தமிழக பயணிகள் லிஸ்ட்

கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழக பயணிகளின் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

Sun, 04 Jun 202307:16 AM IST

ரஹானேவை புகழ்ந்த பிரசாத்

‘வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவர் ரஹானே’என இந்திய கிரிக்கெட் வீரர் முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

Sun, 04 Jun 202307:04 AM IST

ரயில் விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக ரயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து ரயில்வே நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் ஆய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல். கவாச் கருவி செயல்படுத்த வழிகாட்டுதல் வெளியிடவும் கோரப்பட்டுள்ளது.

Sun, 04 Jun 202306:13 AM IST

சென்னை - ஹவுரா ரயில் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை - ஹவுரா மெயில் (12840) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Sun, 04 Jun 202305:47 AM IST

ரயில் தண்டாளத்தில் டயர் வைத்த விவகாரம் - 3 பேரிடம் விசாரணை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மேல வாளாடியில் ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

Sun, 04 Jun 202305:39 AM IST

ரயில் விபத்து குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

ரயிலை வேறு தடத்துக்கு மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையை விபத்துக்கு காரணம்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு ஆதாரமற்றது. கவாச் கருவி இருந்திருந்தாலும் விபத்தை தடுத்திருக்க முடியாது.

Sun, 04 Jun 202304:24 AM IST

புதன் கிழமைக்குள் ரயில் சேவையை மீண்டும் துவக்க திட்டம் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கோரமண்டல் ரயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றம்.ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் துவக்க திட்டம் என சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Sun, 04 Jun 202304:19 AM IST

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மாணவர்கள் tneaonline.org, tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயலாக விண்ணப்பிக்கலாம்.

Sun, 04 Jun 202303:57 AM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை!

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தகவல். அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

Sun, 04 Jun 202303:48 AM IST

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது! இதனால் வரும் 5, 6 ஆகிய 2 நாட்களில் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sun, 04 Jun 202303:40 AM IST

ஒடிசா செல்லும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு ஒடிசா செல்கின்றனர்.

Sun, 04 Jun 202303:12 AM IST

கன்னியாகுமரியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள். அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

Sun, 04 Jun 202303:11 AM IST

சைக்கிள் பாதை யாத்திரை!

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓசூரில் இருந்து உத்திரமேரூர் வரை சைக்கிள் பாதை யாத்திரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் கருப்பையா.

Sun, 04 Jun 202303:09 AM IST

உருகுலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி!

ஒடிசா ரயில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 7 பொக்லைன், 14f0 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Sun, 04 Jun 202302:58 AM IST

இயல்பு நிலைக்கு திரும்புகிறது

ஒடிசாவின் பஹானாகா பஜார் நிலையத்தில் நடந்த ரயில் விபத்தில் உருக்குலைந்த 21 பெட்டிகளும் அகற்றப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

Sun, 04 Jun 202302:56 AM IST

மேலும் இரு உடல்கள் மீட்பு 

உருக்குலைந்த ரயில் பெட்டிகளுக்கு இன்னும் உடல்கள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலை மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டது. 

பஹானாகா ரயில் நிலையத்தில் விடிய, விடிய நடைபெற்ற சீரமைப்பு பணிகள். விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்ட

Sun, 04 Jun 202302:53 AM IST

வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் 

உளுந்தூர்பேட்டை - நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓசூரில் இருந்து உத்திரமேரூர் வரை சைக்கிள் பாதை யாத்திரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் கருப்பையா.

இயற்கை வளங்கள் பாதுகாப்பு, நீர், நிலம், விவசாயம் ,சுகாதாரம், மருத்துவம், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து நன்கு அறிந்தவர் வேட்பாளராக இருக்க வேண்டும். செல்போன் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. 

Sun, 04 Jun 202301:58 AM IST

ஒடிசா ரயில் விபத்துக்கு பைடன் இரங்கல்

ஒடிசா ரயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் இதயம் நொறுங்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். அமெரிக்க மக்கள் அனைவருக்கும் எங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 

 

Sun, 04 Jun 202301:55 AM IST

ஒடிசாவில் சீரமைப்புப் பணிகள் தீவிரம் 

ஒடிசா ரயில் விபத்தில் உருக்குலைந்த பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் 7 பொக்லைன்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Sun, 04 Jun 202301:53 AM IST

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2185 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம்

சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 696 மில்லியன் கனஅடியாக உள்ளது

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 456 மில்லியன் கனஅடியாக உள்ளது

Sun, 04 Jun 202301:23 AM IST

ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயம் 

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில், சென்னையில் இருந்து கோவை சென்ற தனியார் ஆம்னி பேருந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

Sun, 04 Jun 202301:17 AM IST

சிறப்பு ரயில் சென்னை வருகை

ஒடிசா ரயில் விபத்தில் இருந்த மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.    

 

Sun, 04 Jun 202301:18 AM IST

மாறாத பெட்ரோல் விலை 

379 நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்கப்படுகிறது. 

Sun, 04 Jun 202301:18 AM IST

தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி 

ஒடிசா ரயில் விபத்தில் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்