Sundar Pichai : குஜராத்தில் கூகுளின் ஃபின்டெக் மையம் திறக்கப்படும் - மோடியை சந்தித்த பின்னர் சுந்தர் பிச்சை அறிவிப்பு
Sundar Pichai : இந்திய டிஜிட்டல் மயத்திற்காக கூகுள் 10 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்யும் என்றும், குஜராத்தில் உலக ஃபின்டெக் இயக்ககத்தை துவங்கும் கூகுள் மற்றும் ஆல்பாஃபடின் சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமரிடம் தெரிவித்தார். வாஷிங்டனில் பிரதமர் மோடியை சந்தித்த பின்ன்ர் சுந்தர் பிச்சை இதை தெரிவித்தார்.
இந்திய டிஜிட்டல் மயத்திற்காக கூகுள் 10 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்யும் என்றும், குஜராத்தில் உலக ஃபின்டெக் இயக்ககத்தை துவங்கும் கூகுள் மற்றும் ஆல்பாஃபடின் சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமரிடம் தெரிவித்தார். வாஷிங்டனில் பிரதமர் மோடியை சந்தித்த பின்ன்ர் சுந்தர் பிச்சை இதை தெரிவித்தார்.
மேலும் அவர், டிஜிட்டல் இந்தியாவில் பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டினார். ‘டிஜிட்டல் இந்தியாவில் பிரதமரின் தொலைநோக்குப்பார்வை அவரது காலத்தைவிட முன்னோக்கியதாக உள்ளது. மற்ற நாடுகள் செய்ய விரும்பும் செயலின் ப்ளூ பிரின்டாகத்தான் நான் அதை பார்க்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார். ‘இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தில் பிரதமரை சந்தித்ததை மிகப்பெருமையாக கருதுகிறோம். இந்தியாவின் டிஜிட்டல் மயத்திற்காக 10 மில்லியன் டாலர் பணத்தை கூகுள் முதலீடு செய்யும் என்று பிரதமரிடம் தெரிவித்துக்கொண்டோம். எங்கள் உலக ஃபின்டெக் இயக்ககத்தை நாங்கள் குஜராத்தின் கிஃப்ட் நகரில் துவகுகிறோம் என்பதை அறிவிப்பது குறித்து நாங்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளோம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிஃப்ட் நகர் அல்லது குஜராத் சர்வதேச நிதி நகரம், மத்திய வணிக மாவட்டம் காந்திநகரில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.
சுந்தர் பிச்சை, 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் 2015ம் ஆண்டில் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆனார். அவர் பிரதமர் மோடியை கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லியில் சந்தித்தார். அவரது தலைமையில் தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சியை கண்டு மிரள்வதாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
சுந்தர்பிச்சை தவிர, பிரதமர் மோடி அமேசான் சிஇஓ ஆன்ட்ரூ ஜெஸ்ஸி மற்றும் டேவிட் எல். கல்ஹீவன் ஆகியோரை வாஷிங்டனில் சந்தித்தார்.
இதுகுறித்து கால்ஹீவன் அளித்த பேட்டியில், இந்தியாவின் வளர்ச்சியில் பிரதமர் மோடிக்கு இருக்கும் அக்கறை மிக முக்கியமான ஓன்று. அவர் ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல் துறையில் அவருக்கு பெருங்கனவு உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியா நாட்டுக்காக மட்டும் முக்கிய பங்காற்றவில்லை. ஏவியேசன் மற்றும் ஏரோ ஸ்பேசில் பெரும் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.
அமேசான் சிஇஓ ஆன்ட்ரூ ஜெஸ்ஸி, இந்தியாவில் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து பேசினார். அவர் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார். இந்திய நிறுவனங்களின் பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுவதில், உதவுவதாகவும் தெரிவித்தார்.
டாபிக்ஸ்