Google CEO Sundar Pichai: ‘இது புதுசு’-கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷன் அறிமுகம்.. இதுல என்ன ஸ்பெஷல்!
Google I/O 2024: கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தினார், இது AI ஆல் வடிவமைக்கப்பட்ட பதில்களைக் காண்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு கூகுள் நகர்ந்துள்ளது.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தினார். முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூகிள் வருடாந்திர ஐ / ஓ டெவலப்பர் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது, இந்த புதிய வெர்ஷனை அறிமுகம் செய்தார். இந்த புதிய வெர்ஷனை பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் எராஸ் டூருடன் ஒப்பிட்டார். அதாவது முந்தைய கூகுள் தேடுபொறியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டதை அவர் இவ்வாறு வேடிக்கையாக தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நிகழ்வின் மிக முக்கியமான அறிவிப்பு கூகுளின் தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்துவதாக அமைந்தது. இந்த புதிய வெர்ஷனின் பெயர் AI Overviews என்றழைக்கப்படுகிறது. கூகுளில் ஒரு தகவலை அறிய பயனர் தேடும்போது, தற்போது வெப்சைட் இணைப்புகளும் காண்பிக்கும். ஆனால், அதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எழுதப்பட்ட பதில்களை இந்தப் புதிய வெர்ஷன் காண்பிக்கும்.
சுந்தர் பேச்சை பேச்சு
சுந்தர் பிச்சை இந்த வெர்ஷனை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:
கூகுளில் நாம் முழுமையாக ஜெமினி யுகத்தில் இருக்கிறோம். இதை டெய்லர் ஸ்விஃப்டின் இசை நிகழ்ச்சி டூருடன் ஒப்பிடலாம். சில மாற்றங்களுடன் இந்த புதிய வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏஐ அனுபவத்தை நாங்கள் ஆய்வகங்களுக்கு வெளியே சோதித்து வருகிறோம். தேடல் பயன்பாட்டின் அதிகரிப்பு மட்டுமல்லாமல், பயனர் திருப்தியின் அதிகரிப்பையும் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார் சுந்தர் பிச்சை.
ஐந்து கண்டங்களில் 152 நிகழ்ச்சிகளைக் கொண்ட எராஸ் டூர் என்ற பெயரில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் தற்போதைய மெகா உலகளாவிய சுற்றுப்பயணத்துடன் இந்த மகத்தான நிகழ்வை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி ஒப்பிட்டது அங்கே இருந்தவர்களை புன்னகை செய்ய வைத்தது.
AI Overviews எனப்படும் புதிய Google தேடல் அம்சம் இந்த வாரம் அமெரிக்காவில் வெளியிடப்படும் என்றும் வரும் மாதங்களில் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கு கூகுளின் ஏஐ சாட்போட் ஜெமினி உதவுகிறது.
வெப்சைட்களுக்கு அச்சுறுத்தல்?
எவ்வாறாயினும், கூகுள் தேடுபொறி (google search engine) AI Overview வருகையானது, வருவாய் ஈட்டும் நோக்கத்துடன் இருக்கும் வலைத்தளங்களுக்கு (websties) அச்சுறுத்தலாக இருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கூகுள் எல்எல்சி என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது “உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம்” என்று குறிப்பிடப்படுகிறது, மேலும் AI துறையில் அதன் சந்தை ஆதிக்கம், தரவு சேகரிப்பு மற்றும் தொழில்நுட்ப நன்மைகள் காரணமாக உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இன்க், அமேசான், ஆப்பிள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய ஐந்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் PhD மாணவர்களாக இருந்தபோது, அமெரிக்க கணினி விஞ்ஞானிகளான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் செப்டம்பர் 4, 1998 இல் Google நிறுவப்பட்டது.
தற்போது கூகுள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது அனைவரும் அறிந்ததே!
டாபிக்ஸ்