Gotabaya rajapaksha: நாடு திரும்பிய கோத்தபயவுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்து இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச கிட்டத்தட்ட 50 நாள்களுக்கு பிறகு நாடு திரும்பினார். அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்நாட்டுக் கிளர்ச்சி எழுந்தது. இதில், ஆத்திரம் தீராத கிளர்ச்சியாளர்கள், மகிந்த ராஜபட்சே வீடு, ராஜபட்சே அருங்காட்சியகம், பூர்வீக வீடுகள், ராஜபட்சே ஆதரவு அமைச்சர்களின் வீடுகள் சொத்துக்களை தீக்கீரையாக்கினர்.
இலங்கை அதிபரான கோத்தபய ராஜபட்ச வீட்டுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் அங்கு சூறையாடினார். இதற்கிடையே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் பத்திரமாக வீட்டை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபட்ச, கப்பல் மூலம் சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்தபடியே தனது ராஜிநாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். பேங்காக், தாய்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கேட்டார். இதையடுத்து மூன்று மாதம் தங்கியிருக்க தாய்லாந்து அரசு அவருக்கு அனுமதி வழங்கியது.
கோத்தபய ராஜபட்ச நாட்டை விட்டு வெளியேறி 52 நாள்கள் ஆன நிலையில், சொந்த நாடான இலங்கைக்கு மீண்டும் வந்தடைந்தார். அவருக்கு, அமைச்சர்கள், அலுவலர்களும் வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அதிபரான அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனால் காவல்துறை மற்றும் ராணுவம் அடங்கிய படைக்குழு அவருக்கு பாதுகாப்பு வழங்க புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குழுவில் கமாண்டோக்களும் இடம்பெற்றுள்ளனர்.
டாபிக்ஸ்