சுமுகமாக தீர்க்கப்பட்ட பிரச்னை..ஒன்பிளஸ் உடன் வணிக உறவை மீண்டும் தொடங்கிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்
ஒன்பிளஸ் உடனான வணிக உறவை, ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சில்லறை வணிக நெட்வொர்க் மூலம் ஒன்பிளஸ் சாதனங்களை தொடர்ந்து அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் உடன் வணிக உறவை மீண்டும் தொடங்கிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்
ORA என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், ஒன்பிளஸ் உடனான வணிக உறவை அக்டோபர் 1 முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் உடன் வணிக உறவு இணைப்பு
இதுதொடர்பாக தென்னிந்தியா ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் டி. எஸ். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,
"ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்குப் பிறகு, எங்கள் சங்கத்தை தற்காலிகமாக பாதித்த நிலுவையில் உள்ள பிரச்னைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் இப்போது ஒரு புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்போடு முன்னேறுவதை எதிர்நோக்குகிறோம்