தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Sonia Kharge Adhir Ranjan Will Not Attend Ram Mandir Event Congress Said

Ram Temple: ராமர் கோயில் நிகழ்ச்சியில் சோனியா, கார்கே பங்கேற்கபார்களா?-காங்கிரஸ் பதில்

Manigandan K T HT Tamil
Jan 10, 2024 05:00 PM IST

Congress: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் நிகழ்ச்சியில் சோனியா காந்தி, கார்கே, ஆதிர் ரஞ்சன் பங்கேற்பார்களாக இல்லையா என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஆதிர் சவுத்ரி ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஆதிர் சவுத்ரி ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குடமுழுக்கு நிகழ்வு ஆர்.எஸ்.எஸ்/ பாஜக நிகழ்வாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

'நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்களால் ராமர் வழிபாடு செய்யப்படுகிறார். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்/பாஜக நீண்ட காலமாக அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான அரசியல் திட்டத்தை உருவாக்கியுள்ளன. முழுமையடையாத கோவிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைப்பது தேர்தல் ஆதாயத்திற்காக ஆகும். 2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்கி, ராமரை வணங்கும் மில்லியன் கணக்கானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்ரீ மல்லிகார்ஜுன கார்கே, திருமதி சோனியா காந்தி மற்றும் ஸ்ரீ ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்/பாஜக நிகழ்விற்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கடந்த மாதம், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது " என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கலந்து கொள்ளாதது ஏன்? என அக்கட்சி 3 காரணங்களை கூறியுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ்/பாஜக ராமர் கோயிலை ஒரு அரசியல் திட்டமாக மாற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கூறும் இரண்டாவது காரணம், கோயில் முழுமை பெறவில்லை என்பதாக இருக்கிறது. மூன்றாவதாக, தேர்தல் ஆதாயத்திற்காக திறப்பு விழா கொண்டு வரப்பட்டுள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

எனினும், தங்கள் கட்சியும் கட்சியினரும் 2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்