Singappenney: தொடர்ந்து 15 ஆண்டு காலம் டெல்லி முதல்வராக பதவி வகித்த ஷீலா தீட்சித்!
இன்று தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதைப்போல அரசியல் எதற்கு என்று பேசப்பட்ட காலமும் இருந்தது. ஆனால் இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டம் தொடங்கி தங்களுக்கு கிடைந்த வாய்ப்பை பயன்படுத்தி காலம் காலமாக அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் களமாடிய பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அப்படியான பெண் ஆளுமைகளை திரும்பி பார்க்கும் ஒரு முயற்சியே இது. அந்த வகையில் இன்று தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
பஞ்சாப் மாநிலம் காபுர்தலாவில் ஷீலா தீட்சித் பிறந்தார். அவரது தந்தை சஞ்சய் கபூர். ஷீலா தீட்சித் கடந்த 1938ம் ஆண்டு ஜூலை மாதம் மார்ச் 20ம் தேதி பிறந்தார்.
கல்வி
புது தில்லியில் உள்ள கான்வெண்ட் ஜீசஸ் அண்ட் மேடி பள்ளியிலும் பிறக்கு தில்லி பல்கலைக்கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியிலும் பயின்று முதுகலை பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் தத்துவத்திற்கான முனைவர் பட்டம் பெற்றார்.
திருமணம்
உத்தரபிரதேச மாநிலம் உன்னோ மபாவட்டத்தில் உள்ள உகு கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சருமான உமாசங்கர் தீட்சித்தின் குடும்பத்தை சேர்ந்த வினோத் தீட்சித்தை மணம் முடித்தார். அவர் இந்திய ஆட்சி பணியில் பணியாற்றியவர்.
அரசியல்
1984- 1989 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் கானூஜ் மக்களவை தொகுதியின் பிரதிநிதியாக ஷீலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய இணை அமைச்சராக 1986-1989 களில் பணியாற்றினார், முதலில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் சார் அமைச்சராகப் பிறகு பிரதம மந்திரி அலுவலகத்தின் சார் அமைச்சராகவும் பணியாற்றினார். நாடாளுமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றிய இவர் மக்களவையின் மதிப்பீட்டு செயற்குழுவிலும் பணியாற்றினார். இந்தியாவின் நாற்பதாவது சுதந்திர தின நினைவு விழாவின் செயலாக்க செயற்குழு மற்றும் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு நினைவு விழாவிலும் முனைவர் திக்ஷித் தலைவராக இருந்தார். பெண்களின் நிலைக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் (1984-1989) பணியாற்றினார். காங்கிரஸ் செயற்குழுவின் தில்லி பகுதித் தலைவராகப் பணியாற்றி 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறவைத்தார்.
டெல்லி மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டு காலம் டெல்லி முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 2014-ம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார்.
உலக மேயர் விருதுக்காக 2008 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். தில்லியின் முதல் முதல்வராக பணியாற்றியபோது 2008 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று இந்திய பத்திரிகையாளர் சங்கத்திலிருந்து சிறந்த முதல்வருக்கான விருது பெற்றார். 2009 ஆம் ஆண்டு NDTV வழங்கும் அந்த ஆண்டின் சிறந்த அரசியல்வாதி விருதையும் பெற்றார்.
மாற்று கட்சியனருடன் நன்றாக பழகக்கூடியவர் என அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்பட்டவர். தலைநகர் தில்லியின் முக்கிய வளர்ச்சிகளில் ஷீலா தீட்சித் அரசின் முக்கிய முன்னெடுப்புகள் உள்ளது என்றால் அது மிகையல்ல.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்