Sharad Pawar Resignation: ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் என்சிபி தலைவர் சரத் பவார்!
Sharad Pawar Resignation: தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்துள்ளது அந்த கட்சியின் உயர்நிலைக் குழு.
தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்து அந்த கட்சியின் உயர்மட்ட குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 2-ம் தேதி சரத் பவார் அறிவித்தார். சரத் பவாரின் ராஜினாமா அறிவிப்பு மகாராஷ்டிர அரசியல் மட்டுமன்றி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்வு செய்ய பிரபுல் படேல், சுனில் தாட்கரே, கே.கே.சர்மா, பி.சி.சாக்கோ, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே, சாகன் புஜ்பால், திலீப் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோபி, ஜிதேந்திர அத்வாத், ஹாசன் முஷ்ரிப், தனஞ்ஜெய் முண்டே, ஜெய்தேவ் கெய்க்வாட் உள்ளிட்ட 18 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆலோசனை நடத்தி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில், சரத் பவாரின் ராஜினாமா கடிதத்தை அக்கட்சி ஏற்க மறுத்தது. இதையடுத்து சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பிரபுல் பட்டேல், "சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரிக்கும் வகையில் கட்சியின் உயர்மட்ட குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், சரத் பவாரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்