தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Sadhguru Undergoes Emergency Brain Surgery In Delhi Says They Cut Through My Skull

Sadhguru: ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குருவுக்கு டெல்லியில் அவசர மூளை அறுவை சிகிச்சை!

Marimuthu M HT Tamil
Mar 20, 2024 09:12 PM IST

Sadhguru: ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குருவுக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு குரு ஜக்கி வாசுதேவ் ஒரு வித்தியாசமான யோகி, ஆன்மீகவாதி மற்றும் ஆன்மீக குரு.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு குரு ஜக்கி வாசுதேவ் ஒரு வித்தியாசமான யோகி, ஆன்மீகவாதி மற்றும் ஆன்மீக குரு.

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மூளை அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறார். சமீபத்தில் ஈஷா மகாசிவராத்திரியின்போது நடந்த வழிபாட்டு விழாவில், சத்குரு ஜக்கி வாசுதேவ் உற்சாகமாக நடனமாடினார். இதனைத்தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவை டெல்லி அழைத்துச் சென்று மூளையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

தற்போது சத்குரு ஜக்கி வாசுதேவ், தனது அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருகிறார். மேலும் மூத்த மருத்துவர் ஒருவர், சத்குருவின் உடல் மெல்லதேறி வருகிறது என்றார். 

இந்தச் செய்தி பொதுவில் வந்தவுடன், சத்குரு விரைவில் குணமடைய வேண்டும் என்று பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சத்குரு ஜக்கி வாசுதேவின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலியில், அவர் தனது உடல்நிலையை ஓரளவு சுயநினைவுடன் விளக்குவதைக் காணலாம். 

சத்குரு ஜக்கி வாசுதேவ் இதுதொடர்பான காணொலியில் கூறுகையில், "அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என் மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை செய்து எதையோ கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் இறுதியாக ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு முற்றிலும் காலியாக இருந்தது. அதனால் அவர்கள் அதைக் கைவிட்டுவிட்டு, மூளையில் ஒட்டுக்கேட்டனர். இதோ நான் டெல்லியில் மண்டை ஓடு மற்றும் மூளையுடன் இருக்கிறேன். ஆனால் சேதமடைந்த மூளையுடன் இருக்கிறேன்" என்று அவர் கூறுவார். 

ஆன்மிக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ், கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மூளையில் பிரச்னையுடன் இருந்தார். ஆனால், அவர் வலியை புறக்கணித்து தனது இயல்பான செயல்பாடுகளை மேற்கொண்டார் என்று அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி கூறினார்.

இதுதொடர்பாக வினித் சூரி கூறியதாவது, ‘’கடந்த நான்கு வாரங்களாக அவருக்கு தலைவலி இருந்தது. தலைவலி மிகவும் கடுமையாக இருந்தது. 

அவர் தனது வழக்கமான செயல்களைச் செய்ய வேண்டியிருந்ததால் அதைப் புறக்கணித்தார். அவர் வலியுடன் இருந்தபோதிலும், மார்ச் 8ஆம் தேதி மகாசிவராத்திரி விழாவைக் கூட நடத்தினார். மார்ச் 15அன்று வலி மிகவும் தீவிரமானது. பின்னர் அவர் என்னிடம் ஆலோசனை நடத்தினார்.

மாலை 4 மணிக்கு நான் அவருக்கு எம்ஆர்ஐ செய்ய அறிவுறுத்தினேன். ஆனால்,அவர் மாலை 6 மணிக்கு மிக முக்கியமான சந்திப்பை நடத்தினார். அதைத் தவிர்க்க விரும்பவில்லை. இருப்பினும், எம்ஆர்ஐ செய்யப்பட்டது. பின்னர், MRI ஸ்கேன் ரிப்போர்ட்டின்படி, மூளையில் அதிக இரத்தப்போக்கு இருப்பதைக் காட்டியது. அந்த ரத்தப்போக்கு மூளைக்கு வெளியேயும் எலும்பின் கீழும் இருந்தது. இரண்டு முறை இரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. ஒன்று சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்தது மற்றும் இரண்டாவது மூன்று நாட்களுக்கு முன்பு நடந்தது"என்று சூரி கூறினார்.

கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா, கங்கனா ரனாவத், பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் சந்தானம், பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன், நாட்டுப்புறப் பாடகர் மகாலிங்கம், கர்நாடக இசைக்கலைஞர் சந்தீப் நாராயணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்