Rashtriya Hindu Parishad: பாஜக 400 இடங்களை தாண்ட முடியாமல் போனதால் டிவியை கொளுத்திய ராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rashtriya Hindu Parishad: பாஜக 400 இடங்களை தாண்ட முடியாமல் போனதால் டிவியை கொளுத்திய ராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர்

Rashtriya Hindu Parishad: பாஜக 400 இடங்களை தாண்ட முடியாமல் போனதால் டிவியை கொளுத்திய ராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர்

Manigandan K T HT Tamil
Jun 05, 2024 11:50 AM IST

BJP: "அப்கி பார் 400 பார்" என்ற கூற்றை பாஜக நிறைவேற்றாததை அடுத்து, வேதனையில் ராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர் கோவிந்த் பராஷர் அலுவலகத்திற்குள் இருந்த தொலைக்காட்சியை உடைத்து தீ வைத்தார்.

Rashtriya Hindu Parishad: பாஜக 400 இடங்களை தாண்ட முடியாமல் போனதால் டிவியை கொளுத்திய ராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர்
Rashtriya Hindu Parishad: பாஜக 400 இடங்களை தாண்ட முடியாமல் போனதால் டிவியை கொளுத்திய ராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர் (HT Photo)

பராஷர் ஒரு அறிக்கையில், "நாடு மீண்டும் 'பாரத் தேரே துக்டே ஹோங்கே இன்ஷா அல்லா இன்ஷா அல்லாஹ்' என்று சொன்னவர்களின் கைகளில் விழுந்துள்ளது" என்று கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியும் தொண்டர்களை மதித்து கட்சிக்குள் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

லோக்சபா தேர்தல் 2024

18வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1, 2024 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபற்றது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 16 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) உடனடியாக அமலுக்கு வந்தது. 2019 லோக்சபா தேர்தல் 75 நாட்களில் முடிவடைந்த நிலையில், 2024 இல் சமீபத்திய தேர்தல் செயல்முறை 81 நாட்களுக்கு தொடர்ந்தது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஜெயித்தது. ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. சிக்கிமில் அந்த மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பலம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) (அஜித் பவார்), ஜனதா தளம் (மதச்சார்பற்ற), அதிமுக (ஓபிஎஸ்), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்), ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி மற்றும் பிற முக்கிய கட்சிகள் உள்ளன. மேலும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், அசோம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், அப்னாடல் (சோனேலால்), ராஷ்ட்ரிய லோக் தளம், நிஷாத் கட்சி, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜனநாயக் ஜனதா கட்சி, ஹரியானா லோகித் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி, நாகா மக்கள் முன்னணி, சிரோமணி அகாலி தளம் சம்யுக்தா, பாரத் தர்ம ஜன சேனா, கேரள காமராஜ் காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி (Athawale of India) , ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா, பிரஹர் ஜனசக்தி கட்சி, ஜன சுராஜ்ய சக்தி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, கோர்கா தேசிய விடுதலை முன்னணி போன்றவை உள்ளன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.