Rajasthan: ’2 ரூபாய்க்கு மாட்டு சாணம்! மாணவர்களுக்கு லேப்டாப்! பெண்களுக்கு ஸ்மார்ட் போன்!’ பாஜகவை கதறவிடும் காங்கிரஸ்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rajasthan: ’2 ரூபாய்க்கு மாட்டு சாணம்! மாணவர்களுக்கு லேப்டாப்! பெண்களுக்கு ஸ்மார்ட் போன்!’ பாஜகவை கதறவிடும் காங்கிரஸ்!

Rajasthan: ’2 ரூபாய்க்கு மாட்டு சாணம்! மாணவர்களுக்கு லேப்டாப்! பெண்களுக்கு ஸ்மார்ட் போன்!’ பாஜகவை கதறவிடும் காங்கிரஸ்!

Kathiravan V HT Tamil
Jan 08, 2024 11:06 AM IST

”இந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகும்”

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து பேசும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து பேசும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் (PTI)

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், ஒரு கிலோ மாட்டுச் சாணத்தை 2 ரூபாய்க்கு வாங்குவது, அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், ஒரு கோடி பெண்களுக்கு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக ஜெய்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அசோக் கெலாட், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

“ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன் கார்கேவும் ‘நீங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்’ என்று கூறுகிறார்கள். கடந்த முறை, ஏழு நாட்களில் (விவசாயிகளின்) கடன்களை தள்ளுபடி செய்வதாக ராகுல் காந்தி உறுதியளித்தார், அந்த வாக்குறுதி சரியான நேரத்தில் நிறைவேற்றப்பட்டது என்ற அவர் இந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகும் என்று கூறினார்.

மேலும் ஒரு கிலோ மாட்டு சாணத்த்தின் கொள்முதல் விலை 2 ரூபாயாக உயர்த்தப்படும், அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட்கள் வழங்கப்படும், ஒரு கோடி பெண்களுக்கு இணையதள சேவையுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசிய அசோக் கெலாட், “நீங்கள் (ஏஜென்சிகள்) அரசியல் ஆயுதமாகிவிட்டீர்கள். மோடி ஜி, உங்கள் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பாஜகவுக்கு எதிராக அவர் மிகவும் குரல் கொடுப்பதால், ED காங்கிரஸ் தலைவரை குறிவைத்ததாக கெலாட் கூறினார்.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.