Princess Diana Death anniversary : சேவைகளால் உலக மக்கள் மனதை வென்ற இளவரசி டயானா நினைவு தினம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Princess Diana Death Anniversary : சேவைகளால் உலக மக்கள் மனதை வென்ற இளவரசி டயானா நினைவு தினம்!

Princess Diana Death anniversary : சேவைகளால் உலக மக்கள் மனதை வென்ற இளவரசி டயானா நினைவு தினம்!

Priyadarshini R HT Tamil
Aug 31, 2023 06:15 AM IST

Diana : 1997ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் தேதி பணக்கார தொழிலதிபரான முகமத் அல் ஃபயீத்தின் மகன், தோதி அல் ஃபயத்துடனான விருந்திற்கு பிறகு ஆடம்பர் வாகனம் ஏறிச்சென்ற, அவரை, புகைப்படக்கலைஞர்கள் பின் தொடர்ந்தனர். இளவரசியின் புதிய தோழரை புகைப்படம் எடுக்க விழைந்து அவர்களை பின் தொடர்ந்து அது விபத்தில் முடிந்தது.

இளவரசி டயானா நினைவு தினம்
இளவரசி டயானா நினைவு தினம்

வேல்ஸ் இளவரசர் சார்லசுடன் அவர் தீவிரமான நட்பில் இருந்தார். இதனால் அவர்கள் குறித்த வதந்திகள் பரவின. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் அவர் செல்லும் இடங்களில் பின் தொடர துவங்கின. இதனாவ் அவரால் வேலையை தொடர முடியவில்லை. வதந்திகளை குறைக்கும் முயற்சியில் அரண்மனை இறங்கினாலும் அது முடியவில்லை.

1981ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, அதிகாரபூர்வ நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு 30,000 பவுண்ட். அதில் நீலக்கல் சூழ 14 வைரங்கள் இருந்தன.

1981ம் ஆண்டு தூய பால் தேவாலயத்தில் டயானா தனது தந்தை ஏர்ல் ஸ்பென்சருடன் திருமண மேடையில் நடந்து வந்தார். அவருக்கு அப்போது வயது 20. தாய், தந்தை முன்னிலையில் டயானா திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டார். மில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் அந்த திருமணத்தை கண்டுகளித்தனர். மேலும் 6 லட்சம் பேர் பங்கிங்காம் அரண்மனையிலிருந்து தேவாலயம் வரை வழி நெடுக நின்றிருந்தனர்.

டயானா மற்றும் சார்லஸ் தங்களது தேனிலவை பிரிட்டானியா என்ற உல்லாச கப்பலில் கழித்தனர். அக்கப்பல் 12 நாள் பயணமாக மத்திய தரைக்கடல் வழியாக எகிப்திற்கு சென்றது. பின் அவர்கள் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரச மாளிகையில் தங்கினர்.

டயானா எப்போதும் ஒரு பெரிய குடும்பத்திற்காக ஏங்கினார். டயானவின் திருமணம் நடந்த ஓராண்டுக்கு பின்னர் 1982ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்தான் இளவரசர் வில்லியம். ராஜ குடும்பத்தின் அனுமதியுடன், இவர் தனது குழந்தைகளை நர்ச்ரி பள்ளிக்கு அனுப்பினார். நர்சரிக்குச் சென்ற ராஜ குடும்ப முதல் குழந்தை. டயானாவின் குழந்தைகள் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் வைத்து கல்வி கற்காமல் பிற குழந்தைகளுடன் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

1984ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வில்லியமிற்கு தம்பி பிறந்தார். அவருக்கு ஹென்றி என்று பெயர் சூட்டப்பட்டாலும் இளவரசர் ஹாரி என்று அழைக்கப்படுகிறார். இளவரசி டயானா ராஜ குடும்பத்தின் கடமைகளில் ஈடுபட்டார். நர்சரிகளுக்கும், பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் அடிக்கடி சென்றார். மக்களுடன் தொடர்பில் இருந்தார். அது மக்கள் மத்தியில் அவருக்கு நற்பெயரை கொடுத்தது.

அமெரிக்காவிற்கான தனது முதல் அதிகாரபூர்வ விஜயத்தை டயானா மேற்கொண்டபோது வெள்ளை மாளிகையில் நடிகர் ஜான் டிரவேல்டாவுடன் நடனம் ஆடினார். டயானாவின் அப்போதைய கணவருடன் சேர்ந்து நிகழ்த்திய முதல் பொது சந்திப்பு. அப்போது அவர் அணிந்திருந்த ஆடை அனைவரையும் ஈர்த்தது.

டயானாவின் சமூகப் பணிகள் மக்கள் மத்தியில் அவருக்கு புகழை பெற்றுக்கொடுத்தது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை வெளிக்கொண்டு வந்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. எய்ட்ஸ் குறித்து அவர் வெளிப்படையாக பேசினார்.

எய்ட்ஸ் குறித்த பல கருத்துகளை அவர் தகர்த்தார். எய்ட்ஸ் நோயாளிகளிடம் கைகுலுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களுடன் பேசுவதாலோ பழகுவதாலோ எந்த பாதிப்பும் இல்லை என்று நிருபித்தார். 1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவர்கள் தனித்தனியாக வாழ்வது பொதுவெளிக்கு தெரியவந்தது.

1992ம் ஆண்டு இந்தியாவிற்கான அதிகாரபூர்வ விஜயத்தில், `காதல் சின்னமாக` கருதப்படும் தாஜ்மஹாலில் தனியாக அமர்ந்து இருந்தார் டயானா. அதன்மூலம் இளவரசரும் இளவரசியும் அதிகாரபூர்வமாக ஒன்றாக இருந்தாலும், அவர்கள் தனித்து உள்ளனர் என்பது பொதுவெளிக்கு சூட்சகமாக சொல்லப்பட்டது.

டயானா தனது இரண்டு மகன்களுக்கும் சிறந்த தாயாக இருந்தார். அவர் ஓரு குறும்புக்கார அம்மா என்று இளவரசர் ஹாரி குறிப்பிட்டுருந்தார். டயானா தனது வாழ்நாள் முழுவதும் அன்னை தெரேசாவுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். டயானா இறந்த 6 நாட்களில் அன்னை தெரசா உயிரிழந்தார். இது அப்போது உலக மக்கள் மத்தியில் பெரும் சோக நிகழ்வாக இருந்தது.

ஒருமுறை பிபிசி பேட்டியில், பேறுகாலத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தம், இளவரசர் சார்லசுடனான திருமண முறிவு மற்றும் ராஜ குடும்பத்துடன் தனக்கு உள்ள பதற்றமான உறவு ஆகியவை குறித்து பேசினார்.

இந்த துயரங்கள் நிறைந்த காலத்திலும் டயானா தனது சமூக சேவையை தொடர்ந்து மேற்கொண்டார். பாகிஸ்தானின் லாகூரில், இம்ரான் கானால் நடத்தப்படும் புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆதரவு தெரிவிக்க இம்ரான்கானின் அப்போதைய மனைவியாக இருந்த ஜெமைமா கானை சந்தித்தார்.

1996ம் ஆண்டு டயானா மற்றும் சார்ல்ஸின் விவாகரத்து உறுதியானது. விவாகரத்திற்கு பின் டயானா அதிகாரபூர்வமாக `வேல்ஸ் இளவரசி` என்ற பெயரை பெற்றார். 1997ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையின் அட்டைப் படங்களில் வெளியான ஆடைகளை அவர் ஏலம் விட்டார். அதன்மூலம் சமூகப் பணிகளுக்காக 3.5மில்லியன் பவுண்ட் சேகரிக்கப்பட்டது. அவரது கடந்த கால மண வாழ்க்கையை முடித்துக் கொள்வதைக் குறியீடாகக் காட்டும் ஒரு செயலாகவும் அது இருந்தது.

1997ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் தேதி பணக்கார தொழிலதிபரான முகமத் அல் ஃபயீத்தின் மகன், தோதி அல் ஃபயத்துடனான விருந்திற்கு பிறகு ஆடம்பர் வாகனம் ஏறிச்சென்ற, அவரை, புகைப்படக்கலைஞர்கள் பின் தொடர்ந்தனர். இளவரசியின் புதிய தோழரை புகைப்படம் எடுக்க விழைந்து அவர்களை பின் தொடர்ந்து அது விபத்தில் முடிந்தது.

டயானாவின் இறுதி ஊர்வலத்தில் ஒரு மில்லியனிற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அவரது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரி, இளவரசர் சார்ல்ஸ், எடின்பரோ கோமகன் மற்றும் டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் ஆகியோரும் கலந்துகொண்டனர்

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.