PM Modi: "கை வலிக்கும்..!" சிறுவனிடம் கணிவாக பேசிய மோடி - வைரல் விடியோ
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi: "கை வலிக்கும்..!" சிறுவனிடம் கணிவாக பேசிய மோடி - வைரல் விடியோ

PM Modi: "கை வலிக்கும்..!" சிறுவனிடம் கணிவாக பேசிய மோடி - வைரல் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Feb 11, 2024 07:36 PM IST

தன்னை நோக்கி கை அசைத்த சிறுவனிடம் பிரதமர் மோடி கணிவாக பேசிய விடியோ வைரலாகியுள்ளது.

தன்னை நோக்கி கையசைத்த சிறுவனிடம் உரையாடிய மோடி
தன்னை நோக்கி கையசைத்த சிறுவனிடம் உரையாடிய மோடி

தனது தந்தையின் மீது அமர்ந்திருந்த அந்த சிறுவனிடம், "உனது அன்பை ஏற்றுக்கொள்கிறேன். கை அசைப்பதை தயவு செய்து நிறுத்தி சாதரணமாக வைத்து கொள். இல்லாவிட்டால் கை வலிக்க போகிறது" என மோடி பேச கூட்டத்தில் இருந்தவர்கள் பலமாக கைதட்டினர். இதுதொடர்பான விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் ரூ. 7, 550 கோடி மதிப்பிலான நலத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் ஜன் ஜாதிய மகாசபை பொதுக்கூட்டத்தில் பேசினார். சீரியாஸாக பேசிக்கொண்டிருக்யில், தன்னை நோக்கி கையசைத்த சிறுவனை பார்த்து பேச்சை நிறுத்தியதுடன், சிறுவனிடம் க்யூட் உரையாடலும் நிகழ்த்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசும்போது, "எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனவும், பாஜக மட்டும் 370 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெறும்.

ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலை இதற்கு சான்றாக உள்ளது. நான் மக்களின் ஊழியனாக அவர்களுக்கு சேவை செய்ய உள்ளேன்" என்றார்.

முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் உரைக்கு பின் பிரதமர் மோடி பேசியபோது, பாஜகவின் தேர்தல் இலக்கை நிர்ணயித்து 370 என்று குறிப்பிட்டார். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய அரசாங்கத்தின் சாதனையுடன் இணைக்கும் விதமாக முதல் முறையாக இந்த இலக்கை குறிப்பிட்டார்.

இதையடுத்து தேர்தலுக்கு முன்பே பிரதமர் மோடி எவ்வாறு வெற்றி குறித்து சரியான எண்ணிக்கையை சொல்ல முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: