Naveen Patnaik: மக்கள் கேட்டதால் தந்தையின் சமாதியை இடிக்க உத்தரவிட்ட ஒடிசா முதல்வர்! ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Naveen Patnaik: மக்கள் கேட்டதால் தந்தையின் சமாதியை இடிக்க உத்தரவிட்ட ஒடிசா முதல்வர்! ஏன் தெரியுமா?

Naveen Patnaik: மக்கள் கேட்டதால் தந்தையின் சமாதியை இடிக்க உத்தரவிட்ட ஒடிசா முதல்வர்! ஏன் தெரியுமா?

Kathiravan V HT Tamil
May 18, 2023 08:20 PM IST

"தனது தந்தை கல்லில் அல்ல, மக்களின் இதயங்களில் வாழ்கிறார்” என நவீன் பட்நாயக் கருத்து

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் - முன்னாள் முதலமைச்சர் பிஜூ பட்நாயக்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் - முன்னாள் முதலமைச்சர் பிஜூ பட்நாயக்

கடந்த 2019 ஆம் ஆண்டு பூரியில் உள்ள ஸ்வர்கத்வாரில் உள்ள தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக்கின் சமாதியை அகற்ற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார் என நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன், துபாயில் நடைபெற்ற ஒடியா புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஸ்வர்கத்வாரில் தகனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்று நம்புவதால், பல இந்துக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை தகனம் செய்ய விரும்புகிறார்கள். கடந்த ஏப்ரல் 17, 1997 ஆண்டு பிஜு பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு ஸ்வர்கத்வாரில் உள்ளூர் சிவில் அமைப்பால் பிஜு பட்நாயக்கின் நினைவிடம் கட்டப்பட்டது. இந்த 'சமாதி' தகனக் கூடத்தின் ஒரு பெரிய பகுதியை எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில் பொதுமக்களும் உடல்களை தகனம் செய்யும் விதமாக தனது தந்தையின் சமாதி உள்ள கட்டுமான பகுதியை அகற்ற உத்தரவிட்டர். இது குறித்து முதலமைச்சர் பிஜூ பட்நாயக் கூறுகையில் "தனது தந்தை கல்லில் அல்ல, மக்களின் இதயங்களில் வாழ்கிறார் கூறியதாக பண்டியன் கூறினார்.

முதல்வரின் உத்தரவின் படி கடந்த 17ஆம் தேதி காலை முதலே நினைவிடத்தை அகற்றம் நடந்தது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.