National Legal Services Day : தேசிய சட்ட சேவைகள் தினம் – இந்த நாளுக்கு இப்படி ஒரு உன்னத பணி உள்ளதா?
தேசிய சட்ட சேவைகள் தினத்தை தொடர்ந்து, தேசிய அளவில் தேசிய சட்ட சேவைகள் முகமை அமைக்கப்பட்டது. இதன் கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தேசிய சட்ட சேவைகள் தினம் இந்தியாவில் நவம்பர் 9ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சட்ட சேவைகள் அதிகார சட்டம் 1987ஐ ஏற்றுக்கொண்ட தினம் தான் சட்ட சேவைகள் தினம். இந்த சட்டம் அலுவல் ரீதியாக 1995ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. அப்போது முதல், சட்ட சேவைகள் தினம் இந்திய மாநிலங்கள் முழுவதிலும், பொதுமக்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.
தேசிய சட்ட சேவைகள் தினத்தை தொடர்ந்து, தேசிய அளவில் தேசிய சட்ட சேவைகள் முகமை அமைக்கப்பட்டது. இதன் கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
பொதுமக்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய சட்ட சேவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றாலும், எந்த அடையாளத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கு இலவச சட்ட உதவிகள் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் இந்த நாள் நவம்பர் 9ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
விளிம்பு நிலை மக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு சட்ட அறிவு கொஞ்சமாவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது. இந்த நாளில் அந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் இலவச சட்ட ஆலோசனைகள் குறித்து கற்பிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் நிறுவியது.
1995ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி சட்ட சேவைகள் அதிகார சட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் இயற்றியது. மக்களுக்கு இலவச சட்ட சேவையை வழங்குவது அதன் நோக்கம். அந்த சட்டத்தின்படி சமூகத்தில் பலவீனமான நிலையில் உள்ள மக்களால் இலவச சட்ட உதவியை பெற முடியும். தேசிய, மாநில, மாவட்ட அளவிலான உதவிகளை பெற முடியும்.
இந்த நாளில் லோக் அதாலத்களை நடத்துவது. சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, தேவை உள்ள மக்களை அணுகுவதற்கு சட்ட உதவி முகாம்கள் நடத்துவது என பல்வேறு வேலைகள் இந்த நாளில் மேற்கொள்ளப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்