தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Andhra Pradesh Cm Oath: வரும் ஜூன் 12ஆம் தேதி அமராவதியில் முதலமைச்சராக பதவியேற்கிறார் சந்திர பாபு நாயுடு

Andhra Pradesh CM Oath: வரும் ஜூன் 12ஆம் தேதி அமராவதியில் முதலமைச்சராக பதவியேற்கிறார் சந்திர பாபு நாயுடு

Marimuthu M HT Tamil
Jun 07, 2024 10:33 AM IST

Andhra Pradesh CM Oath: ஜூன் 12ஆம் தேதி அமராவதியில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார். ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க இருப்பதால், அவர் தனது பதவியேற்பு விழாவை இப்போது ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.

Andhra Pradesh CM Oath: ஜூன் 12ஆம் தேதி அமராவதியில் முதலமைச்சராக பதவியேற்கிறார் சந்திர பாபு நாயுடு
Andhra Pradesh CM Oath: ஜூன் 12ஆம் தேதி அமராவதியில் முதலமைச்சராக பதவியேற்கிறார் சந்திர பாபு நாயுடு (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

நரேந்திர மோடி ஜூன் 8ஆம் தேதி, நாளை பிரதமராக பதவியேற்பதால் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நர. சந்திரபாபு நாயுடு தனது பதவியேற்பு விழாவை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளது என்று ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பதவியேற்பு விழா அவர் உருவாக்கிய ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மீண்டும் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு

கடந்த ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில், ஆந்திராவில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வென்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இக்கட்சியை சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். 

அவரது முக்கிய எதிரியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, 11 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால், தெலுங்கு தேசம் கட்சி மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. 

2024 மக்களவைத் தேர்தலிலும் சந்திர பாபு நாயுடுவின் கட்சி ஒரு மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், 16 இடங்களில் வென்று நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது. மேலும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்த பாரதிய ஜனதா கட்சியினை, மத்தியிலும் ஆதரித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உதவியது.

திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் ஜாமீனில் இருந்தபோது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தலுக்காக பிரசாரம் செய்தார்.  முன்னதாக இவர் இவ்வழக்கில் 2023 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து திரும்பிய பிறகு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதில் சந்திர பாபு நாயுடு சிறப்புக் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் 135 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்று, அக்கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு மீண்டும் முதலமைச்சர் ஆக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவானது வரும் ஜூன் 12ஆம் தேதி நடக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பின்னணி என்ன?

சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20, 1950அன்று ஆந்திராவின் பிரிக்கப்படாத சித்தூர் மாவட்டத்தில் உள்ள நரவாரிப்பில் பிறந்தார். திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கேபினட் அமைச்சராக உயர்ந்தார்.

பின்னர், அவர் தனது மறைந்த மாமனாரும் பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமராவ் நிறுவிய தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். சந்திர பாபு நாயுடு முதன்முதலில் 1995ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். மேலும் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தார். பிரிக்கப்படாத ஆந்திராவின் முதல்வராக அவரது பதவிக்காலம் 1995ல் தொடங்கி 2004ல் முடிவடைந்தது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, 3-வது முறையாக ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார்.

90-களின் பிற்பகுதியில், மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் சந்திரபாபு நாயுடு முக்கியப் பங்கு வகித்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் அமைத்த முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வெளியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி ஆதரித்தது. 2019ஆம் ஆண்டில், அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தனது ஆட்சியைப் பறிகொடுத்தார். 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்