Mulayam Singh Yadav: முலாயம் சிங் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
குருகிராம்: உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் திடீர் உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
82 வயதான முலாயம் சிங் யாதவுக்கு இன்று (அக்.02) திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.
எனினும், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் முழு அளவில் குணமடைந்த பின்னர் அவரை சந்திக்கலாம் என்றும் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அரசியல் கட்சி தலைவர் பலரும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனா்.
டாபிக்ஸ்