Madhya Pradesh cabinet expansion: மத்திய பிரதேச அமைச்சரவை இன்று விரிவாக்கம்: முதல்வர் மோகன் யாதவ் உறுதி
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Madhya Pradesh Cabinet Expansion: மத்திய பிரதேச அமைச்சரவை இன்று விரிவாக்கம்: முதல்வர் மோகன் யாதவ் உறுதி

Madhya Pradesh cabinet expansion: மத்திய பிரதேச அமைச்சரவை இன்று விரிவாக்கம்: முதல்வர் மோகன் யாதவ் உறுதி

Manigandan K T HT Tamil
Dec 25, 2023 10:25 AM IST

மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவை திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், டிச. 24, 2023 ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார்.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், டிச. 24, 2023 ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார். (PTI)

* இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் தலைமையில், நாங்கள் மீண்டும் இரட்டை இயந்திர அரசாங்கமாக வருவோம்" என்று மோகன் யாதவ் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரை ம.பி முதல்வர் மோகன் யாதவ் நேற்று சந்தித்தார்.

தற்போது, அமைச்சரவையில் முதல்வர் மோகன் யாதவ் மற்றும் இரண்டு துணை முதல்வர்கள், ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகிய மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் வழிகாட்டுதலை முதல்வா் மோகன் யாதவ் இன்று பெற்றுள்ளாா். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் நடந்து வருகிறது.

230 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் அமைச்சரவையின் அதிகபட்ச பலம் முதல்வர் உட்பட 35 ஆக இருக்கலாம். கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 163 இடங்களிலும், காங்., 66 இடங்களிலும் வெற்றி பெற்றன.

சுக்லா, தேவ்தா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.