Lunar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! தொடங்கும் நேரம் எப்போது? - முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lunar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! தொடங்கும் நேரம் எப்போது? - முழு விவரம்

Lunar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! தொடங்கும் நேரம் எப்போது? - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 26, 2023 02:31 PM IST

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. முழு சந்திர கிரகணமாக அமைந்திருக்கும் இந்த கிரகணம் சித்திர பெளர்மணி நாளான இன்று மாலை தொடங்கி நிகழவுள்ளது. பெனுபிரல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும் இந்த கிரகணம் எங்கெல்லாம் தெரியும் என்பதை பார்க்கலாம்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது

முழு சந்திர கிரகணமானது, சந்திரன் பூமியின் நிழலை முழுவதுமாக கடந்து செல்லும் போது நிகழ்கிறது, இதன் காரணமாக சந்திரன் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்துக்கு மாறுகிறது.

சந்திரன் பூமியின் நிழலின் வழியாக பகுதியளவு மட்டும் கடந்து செல்லும் நிகழ்வை பகுதி சந்திர கிரகணம் என்று அழைக்கிறார்கள். இந்த நிகழ்வின்போது சந்திரனின் ஒரு பகுதி மட்டும் நிறம் மாறும்.

சந்திரன் பூமியின் நிழலின் வெளிப் பகுதி வழியாக செல்லும் போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது, இதனால் சந்திரன் வழக்கத்தை விட சற்று கருமையாக தோன்றும்.

இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் இருப்பவர்களால் பார்க்க முடியும். அத்துடன், பசுபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் பகுதியிலும் தெளிவாக பார்க்க முடியும்.

இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் இரவு 8.44க்கு தொடங்கி, இரவு 10.52 மணிக்கு உச்சம் பெறுகிறது. மே 6ஆம் தேதி அதிகாலை 1.01 மணிக்கு சந்திரகிரகணமாகனது நிறைவடைகிறது.

இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியாது என்றாலும், கிரகண நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சந்திர கிரகணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு வரும் வானியல் நிகழ்வாக இருந்து வரும் நிலையில், உலகில் பல்வேறு கலாச்சாரங்களில் இவை ஆன்மிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்து மதத்தில், சந்திர கிரகணத்தின்போது எதிர்மறை ஆற்றல் பெருக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் கிரகணம் நிகழும் இந்த நேரத்தில் சமையல் அல்லது பயணம் போன்ற முக்கியமான செயல்களை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.

வெறுகண்களால் இந்த பெனும்பிரல் கிரகணத்தை பார்க்கலாம் என கூறப்படும் நிலையில், சரியான கருவிகள் மூலம் பார்ப்பதன் மூலம் நல்ல அனுபவத்தை பெறலாம்.

இதை காண்பதற்கு சிறந்த பைனாக்குலர், டெலஸ்கோப் அல்லது தரமான DSLR கேமரா உதவியுடன் இந்த கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.