Voter ID: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி-மத்திய அரசு விளக்கம்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை மத்திய அரசு இன்னும் தொடங்கவில்லை என வெள்ளிக்கிழமை அன்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்தார்.
“வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான இலக்கு எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், EPIC உடன் ஆதாரை இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், படிவம் 6பியை சமர்பிப்பதற்கான கால அவகாசம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
எழுத்துப்பூர்வ பதிலில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது சுயவிருப்பத்தின் அடிப்படையிலானது என்றும், படிவம் 6B-ல் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிவம் 6பி (ஆதார் அட்டையை இணைக்க) சமர்ப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி பிரத்யுத் போர்டோலோயின் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளஇத்தார்.
“இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் பிரிவு 324 இன் கீழ் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு பொறுப்பாகும், மேலும் பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்புடன் தரவை பராமரிக்கிறது” என்று மத்திய அமைச்சர் மேக்வால் மேலும் கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த உதவும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தனித்துவமான அடையாளங்காட்டியை உருவாக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த வளர்ச்சி வந்துள்ளது. இந்த விவரங்கள் இ-ஷ்ராம் தரவுத்தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் இந்த ஆவணம் கட்டாயமாக்கப்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்