LIC: எல்ஐசி புதிய MD தப்லேஷ் பாண்டே!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lic: எல்ஐசி புதிய Md தப்லேஷ் பாண்டே!

LIC: எல்ஐசி புதிய MD தப்லேஷ் பாண்டே!

Manigandan K T HT Tamil
Mar 14, 2023 03:59 PM IST

Tablesh Pandey: மார்ச் 13 தேதியிட்ட இந்திய அரசின் அறிவிப்பின்படி, மும்பையில் உள்ள இந்திய எல்.ஐ.சி சென்ட்ரல் ஆபீஸ் நிர்வாக இயக்குனரான தப்லேஷ் பாண்டே, எல்ஐசியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்ஐசி மும்பை அலுவலகம்
எல்ஐசி மும்பை அலுவலகம்

ஏப்ரல் 1 அன்று அல்லது அதற்கு பிறகு அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 13 தேதியிட்ட இந்திய அரசின் அறிவிப்பின்படி, மும்பையில் உள்ள இந்திய எல்.ஐ.சி சென்ட்ரல் ஆபீஸ் நிர்வாக இயக்குனரான தப்லேஷ் பாண்டே, எல்ஐசியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய எல்.ஐ.சி துணை நிர்வாக இயக்குநராக பி.சி பட்நாயக் நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிதிச் சேவை நிறுவனங்களின் பணியகம், அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனத்தில் பதவிக்கு எம் ஜெகநாத் மற்றும் தப்லேஷ் பாண்டே ஆகியோரை பரிந்துரைத்தது.

எல்ஐசியின் பங்குகள் NSE இல் 0.50% குறைந்து ரூ 579.20 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது

கடந்த வாரம், எல்ஐசி, மார்ச் 14 முதல் மூன்று மாதங்களுக்கு இடைக்கால தலைவராக சித்தார்த்த மொகந்தியை நியமித்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.