தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  "...Art Of Corruption, Corruption Through Art": Anurag Thakur On Fatf Report

Congress: ‘கலை மூலம் ஊழல் புரியும் கட்சி காங்கிரஸ்’-மத்திய அமைச்சர் சாடல்

Manigandan K T HT Tamil
Mar 14, 2023 03:14 PM IST

சமீபத்தில் வெளியான FATF அறிக்கையில், யெஸ் பேங்க் முன்னாள் சிஇஓ ராணா கபூர், பிரியங்காவிடம் பெயிண்டிங் ஒன்றை ரூ.2 கோடி கொடுத்து வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

உலகளாவிய கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து அனுராக் தாக்குர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FATF அமைப்பு பயங்கரவாத நிதியுதவி தொடர்பான பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளைக் கையாளும் ஒரு அமைப்பு ஆகும். அதன் வழக்கு ஆய்வு ஒன்றில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேராவைக் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான FATF அறிக்கையில், யெஸ் பேங்க் முன்னாள் சிஇஓ ராணா கபூர், பிரியங்காவிடம் பெயிண்டிங் ஒன்றை ரூ.2 கோடி கொடுத்து வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், "காங்கிரஸ் கட்சி ஊழலின் கலையை அறிந்து வைத்திருக்கிறது. கலையின் மூலமாகவும் ஊழியர் புரிய தெரிந்து வைத்திருக்கிறது. நாட்டுக்கு எதிராக அவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) பிரசாரம் செய்து வருகின்றனர். நாட்டு மக்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

லண்டனில் கண்ணீர் சிந்துவதை நிறுத்த வேண்டும். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்குகளை விசாரிக்கும் அமைப்புகள் இப்போது காங்கிரஸின் ஊழல் மாடலை ஆய்வு செய்து வருகின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு எப்படி அழுத்தம் கொடுத்தார் என்பது குறித்து FATF ஒரு கேஸ் ஸ்டடியை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸின் ஊழலின் புதிய மாதிரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன. சில சமயம் நேஷனல் ஹெரால்டு, சில சமயம் மற்றொன்று. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் ஒரு தனிநபருக்கு எப்படி அழுத்தம் கொடுத்தார் என்பது குறித்து இப்போது FATF ஒரு கேஸ் ஸ்டடியை வெளியிட்டுள்ளது.

FATF அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள "Mr R" இன் அடையாளத்தை வெளிப்படுத்த பிரியங்கா காந்தி தான் பதிலளிக்க வேண்டும். பிரியங்கா காந்திக்கு எனது கேள்வி இதுதான். ராணா கபூரை ஓவியம் வாங்க 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வற்புறுத்தியது யார்?

அந்த ஓவியத்தை விற்க வேண்டிய அவசியம் என்ன? ஓவியம் விற்ற பணம் யாருக்காக செலவிடப்பட்டது? இதில் ஈடுபட்ட 'Mr R' யார்? அது பத்ம பூஷன் ஓவியமா? எத்தனை பத்ம விருதுகள், ஓவியங்கள் விற்கப்பட்டு பணம் திரட்டப்பட்டது?

இந்த வகையில் எத்தனை பத்ம விருதுகள் விற்கப்பட்டுள்ளன என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும். பணம் மற்றும் ஓவியத்திற்கு மாற்றாக பத்ம பூஷன் வழங்கப்பட்டதா?

இது காங்கிரஸின் ஊழல் மாதிரியா? வேறு எத்தனை தேசிய கௌரவங்களை பணத்திற்கு விற்றுவிட்டீர்கள்? நாட்டை விற்கும் எந்த வாய்ப்பையும் நீங்கள் தவறவிடவில்லை.

இன்று நாடு மட்டுமின்றி உலகமே காங்கிரசின் ஊழல் குறித்து கேள்வி எழுப்புகிறது. காங்கிரஸிடம் எத்தனை ஊழல் மாதிரிகள் உள்ளன? என்றார் அனுராக் தாக்குர்.

காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "பாஜக ஒரு சதியை செய்துள்ளது. அவர்கள் சதி செய்ய விரும்பினால், அவர்களால் முடியும், ஆனால் நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்றார்.

காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்த இமாசலிலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததால் அனுராக் தாக்குருக்கு வலி ஏற்பட்டுள்ளது. அவருடைய வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்றார்.

திமுக எம்பி எம்.சண்முகம் கூறுகையில், "பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது வாடிக்கையான செயல்" என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்