Justin Dog: மாணவி உடன் வந்த நாய்க்கு டிப்ளமோ பட்டம் வழங்கிய செட்டான் ஹால் பல்கலைக்கழகம்! ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Justin Dog: மாணவி உடன் வந்த நாய்க்கு டிப்ளமோ பட்டம் வழங்கிய செட்டான் ஹால் பல்கலைக்கழகம்! ஏன் தெரியுமா?

Justin Dog: மாணவி உடன் வந்த நாய்க்கு டிப்ளமோ பட்டம் வழங்கிய செட்டான் ஹால் பல்கலைக்கழகம்! ஏன் தெரியுமா?

Kathiravan V HT Tamil
May 27, 2023 05:20 PM IST

கிரேசி உடன் அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொண்ட நாயின் அர்ப்பணிப்பை பாராட்டுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.do

டிப்ளமோ பட்டம் பெற்ற ஜஸ்டின் என்ற நாய்
டிப்ளமோ பட்டம் பெற்ற ஜஸ்டின் என்ற நாய்

நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள சவுத் ஆரஞ் பகுதியில் 1856ஆம் ஆண்டு முதல் செட்டான் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. கத்தோலிக்க பல்கலைக்கழகமாக அறியப்படும் இந்த கல்வி நிறுவனத்தில் 90க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புக்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கு பட்டம் வழங்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

செட்டான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பயின்று வரும் மாற்றுத்திறனாளியான கிரேஸ் மரியானிக்கு பட்டம் வழங்கப்பட்ட நிலையில், கிரேஸ் கல்வி பயிலும் காலத்தில் அவருடன் வந்த அவரது செல்லப்பிராணியான ஜஸ்டின் என்ற நாய்க்கும் டிப்ளமோ பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவின் போது கிரேஸ்க்கு பட்டம் அளிக்கும் பல்கலைக்கழக தலைவர் ஜோசப், அவரோடு பட்டமளிப்பு விழாவுக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக ஆடையை அணிந்து வந்த அவரது நாய் ஜஸ்டினின் வாயில் டிப்ளமோ பட்டத்தை கொடுத்தார். அப்போது சுற்றி உள்ளர்கள் ஆரவாரம் செய்து தங்கள் பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிரேசி உடன் அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொண்ட நாயின் அர்ப்பணிப்பை பாராட்டுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.