தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Iranian School Girls Being Poisoned By Toxic Gas?

Iran : மாணவிகள் மீது செலுத்தப்பட்ட விஷவாயு?.. ஈரானில் மீண்டும் பரபரப்பு!

Divya Sekar HT Tamil
Mar 05, 2023 01:36 PM IST

Iran school girls : ஈரானில் பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரானில் மீண்டும் பரபரப்பு
ஈரானில் மீண்டும் பரபரப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதலே ஈரான் தலைநகர் தெஹ்ரான் தெற்கில் இருக்கும் கோம் நகரில் பள்ளி மாணவிகளுக்குச் சுவாச பகுதியில் பாய்சன் அதாவது விஷ பாதிப்பு ஏற்படும் வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. 

கிட்ட தட்ட பல நூறு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாணவிகளுக்குப் பாதிப்பு மோசமாகப் போக அவர்களுக்கு தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அடையாளம் தெரியாத சிலர் திட்டமிட்டு இப்படி செய்வதை துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி உறுதிப்படுத்தினார். இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விரிவான விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட நகரங்களில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஹமேடன், ஜான்ஜன், மேற்கு அஜர்பை ஜான், பார்ஸ், அல்போர்ஸ் மாகாணங்களில் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரசனைகளால் ஏராளமான மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஈரானில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் 10 மாகாணங்களில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்