INDIA Alliance: அதிரடி திருப்பம் ஏற்படுமா..- நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசினாரா சரத் பவார்?
NDA: மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படுவதால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போன்ற பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் சரத் பவார் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி கட்சிக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு தெரிவிக்குமா என அரசியல் சூழலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் புதிய தடைகளை சந்திக்க நேரிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.
ஆட்சியை இழக்கும் ஜெகமன் மோகன் ரெட்டி
அந்த மாநிலத்தில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழக்கிறார்.
நமது நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் ஜெயிக்கும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். பாஜக தற்போதைய சூழலில் 240+ தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
அதேநேரம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவரான சரத் பவார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை முடிவுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடிக்க தேவையான இடங்களை கைப்பற்றவில்லை எனில் அதன் கூட்டணி கட்சியின் தயவை நாட வேண்டியிருக்கும்.
ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் 30 இடங்களை மக்களவையில் தங்கள் வசம் வைத்துள்ளன. இதனால், இவர்கள் இருவரும் 'KING MAKERS' ஆக கருதப்படுகிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்படுவதால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் சரத் பவார் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்தியா டுடே தொலைக்காட்சி அறிக்கையின்படி, இந்தியா பிளாக் தலைவர் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது.
சரத் பவார் நதிஷை தொடர்பு கொண்டு பேசினாரா?
இதனிடையே, நிதிஷ் குமாரை நான் தொடர்பு கொண்டு பேசவில்லை என சரத் பவார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தல் 2024
18வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1, 2024 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபற்றது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 16 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) உடனடியாக அமலுக்கு வந்தது. 2019 லோக்சபா தேர்தல் 75 நாட்களில் முடிவடைந்த நிலையில், 2024 இல் சமீபத்திய தேர்தல் செயல்முறை 81 நாட்களுக்கு தொடர்ந்தது.
ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. சிக்கிமில் அந்த மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பலம்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) (அஜித் பவார்), ஜனதா தளம் (மதச்சார்பற்ற), அதிமுக (ஓபிஎஸ்), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்), ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி மற்றும் பிற முக்கிய கட்சிகள் உள்ளன. மேலும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், அசோம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், அப்னாடல் (சோனேலால்), ராஷ்ட்ரிய லோக் தளம், நிஷாத் கட்சி, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜனநாயக் ஜனதா கட்சி, ஹரியானா லோகித் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி, நாகா மக்கள் முன்னணி, சிரோமணி அகாலி தளம் சம்யுக்தா, பாரத் தர்ம ஜன சேனா, கேரள காமராஜ் காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி (Athawale of India) , ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா, பிரஹர் ஜனசக்தி கட்சி, ஜன சுராஜ்ய சக்தி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, கோர்கா தேசிய விடுதலை முன்னணி போன்றவை உள்ளன.
டாபிக்ஸ்