தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bsp Manifesto: ’தெலங்கானாவில் வென்றால் இலவச வாஷிங் மெஷின்! ஸ்மார்ட் போன்!’ பகுஜன் சமாஜ் கட்சி அதிரடி!

BSP Manifesto: ’தெலங்கானாவில் வென்றால் இலவச வாஷிங் மெஷின்! ஸ்மார்ட் போன்!’ பகுஜன் சமாஜ் கட்சி அதிரடி!

Kathiravan V HT Tamil
Oct 17, 2023 08:27 PM IST

“அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்.எஸ்.பிரவீன் குமார் இலவசமாக வாஷிங் மெஷின் வழங்கும் திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்”

பெண் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது
பெண் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது

ட்ரெண்டிங் செய்திகள்

ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் வெளி வருகின்றன. இந்த போட்டியில் மூன்றாவது கட்சியாக பாஜக களமிறங்கி பரப்புரையில் அனலை கக்கி வரும் வேளையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது பகுஜன் சமாஜ்வாதி கட்சி.

அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்.எஸ்.பிரவீன் குமார் இலவசமாக வாஷிங் மெஷின் வழங்கும் திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் மாற்றத்திற்கான பகுஜன் சமாஜ் கட்சியின் பத்து திட்டங்கள்

கான்சி யுவ சர்க்கார்

வேலையின்மை பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில், இந்த திட்டம் தெலுங்கானா இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைகளை உருவாக்குவதாக உறுதியளிக்கிறது. அவற்றில் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுஜன் ரிது திமா

விவசாய சமூகத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. விதை முதல் விற்பனை வரை விவசாயிகளுக்கு அரசாங்க மானியங்களைப் பெற்றுத் தருவதை உறுதி செய்கிறது.

பூலே கல்வி திட்டம்

கல்வியில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சர்வதேசப் பள்ளியை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது

நீல நிற வேலை அட்டை

தொழிலாளர்களின் நலனை உறுதி செய்யும் வகையில், இந்த திட்டம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் 150 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை வழங்குகிறது. இதில் தினசரி ஊதியமாக ரூ.350, இலவச போக்குவரத்து மற்றும் விரிவான உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட வசதிகளை தொழிலாளர்களுக்கு அளிக்கிறது.

தொட்டி கொமரய்யா நில உரிமை திட்டம்

நிலம் இன்மையை நிவர்த்தி செய்யும் வகையில், நிலமற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் நிலம் பெண்களின் பெயரில் வழங்க இத்திட்டம் உறுதியளிக்கிறது.

நூறு வருட சுகாதார பராமரிப்பு திட்டம்

சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் உடல்நலக் காப்பீட்டுத் தொகுப்பை பகுஜன் சமாஜ் கட்சி உறுதியளிக்கிறது. இது ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆயுள் காப்பீட்டையும் உள்ளடக்கியது.

சாகலி ஐலம்மா பெண் ஜோதி திட்டம்

இத்திட்டம் பெண் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன்கள், ஓட்டுநர் பயிற்சி, அங்கன்வாடி பணியாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் ஆண்டு மானியமாக மகளிர் குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதை உறுதி அளிக்கிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர் நல நிதி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தத் திட்டத்தில் வளைகுடா தொழிலாளர்களுக்கான நல வாரியங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் மானியத்துடன் கூடிய கேன்டீன்கள் அமைப்பதை உறுதி அளிக்கிறது.

பீம் ரக்ஷனா கேந்திரா

இந்த முன்முயற்சியானது தங்கும் விடுதிகள், உணவு மற்றும் முதியோர்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை, அத்துடன் தங்குமிடங்களில் ஊனமுற்றோர் மற்றும் ஒற்றைப் பெண்களுக்கு ஆதரவை வழங்குகிறது.

ஷேக் பந்தகி க்ரிஹா பரோசா

வீட்டுவசதி பிரச்சினையை சமாளிக்க, இந்த திட்டம் வீடற்ற தனிநபர்களுக்கு 550 சதுரஅடி நிலத்தை உத்தரவாதம் செய்கிறது, வீடு கட்ட விரும்புவோருக்கு 6 லட்சமும், வீடு புனரமைக்க 1.50 லட்சமும் மானியமாக இத்திட்டம் அளிகிறது.

IPL_Entry_Point