HT Tech SPL: நீங்கள் பயணிக்கும் வழியில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கு, கட்டணம் எவ்ளோ.. ஈஸியா தெரிஞ்சிக்கலாம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: நீங்கள் பயணிக்கும் வழியில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கு, கட்டணம் எவ்ளோ.. ஈஸியா தெரிஞ்சிக்கலாம்!

HT Tech SPL: நீங்கள் பயணிக்கும் வழியில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கு, கட்டணம் எவ்ளோ.. ஈஸியா தெரிஞ்சிக்கலாம்!

Manigandan K T HT Tamil
Dec 25, 2023 09:21 AM IST

இந்தச் செயலியில் Toll Plaza Enroute-ஐ அழுத்தி நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் செல்லும் வழியில் உள்ள சுங்கச்சாவடிகளின் விவரங்கள், கட்டண விவரம், கிலோ மீட்டர், பயண நேரம் போன்றவற்றை ஒரு திரை உடனடியாகக் காண்பிக்கிறது.

ராஜ்மார்க்யாத்ரா செயலி
ராஜ்மார்க்யாத்ரா செயலி (google play store)

இந்தச் செயலியின் பெயர் Rajmargyatra. இந்த மொபைல் போன் செயலியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

அப்படி என்ன வசதிகள் இருக்கிறது என கேட்கிறீர்களா? பார்ப்போம் வாங்க.

நாம் பயணிக்கும் சாலையில் விவரங்கள் இந்தச் செயலியில் பார்த்து அறிந்து கொள்ளலாம். சுங்கச்சாவடிகள் (Toll Plaza), மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம்கள், உணவகங்கள், ரிப்பேர் கடைகள் உள்ளிட்ட தகவல்களை உங்கள் விரல் நுனியில் இந்தச் செயலி வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

இந்தச் செயலியில் Toll Plaza Enroute-ஐ அழுத்தி நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் செல்லும் வழியில் உள்ள சுங்கச்சாவடிகளின் விவரங்கள், கட்டண விவரம், கிலோ மீட்டர், பயண நேரம் போன்றவற்றை ஒரு திரை காண்பிக்கிறது.

நீங்கள் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் மைக்கை பயன்படுத்தி குரல்வழியாகவும் செல்லும் இடத்தை குறிப்பிட முடியும்.

Highway Amenities பிரிவில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் உணவகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் செல்லும் வழியில் எங்கு இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.

Know your Highway-ஐ க்ளிக் செய்து உங்கள் நெடுஞ்சாலை குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனத்தின் பிரதிநிதி, அவரது செல்போன் எண், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரியின் பெயர் மற்றும் அவரது செல்போன் எண் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது அவசர உதவிகள் தேவைப்படும்போது இவர்களை எளிதில் அணுக இந்த வசதி உதவும்.

Emergency-ஐ கிளிக் செய்தால் நெடுஞ்சாலை ஆணைய அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், உங்கள் பயண அனுபவங்களை இதில் பதிவு செய்யலாம்.

Weather-ஐ க்ளிக் செய்து வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

தேசிய நெடுஞ்சாலையில் ஏதேனும் பிரச்சனை என்றால் புகாரும் பதிவு செய்யலாம்.

Fastag-க்கு ரீசார்ஜும் செய்ய முடியும். இப்போதைக்கு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தச் செயலியை பயன்படுத்தலாம்.

உங்கள் செல்போன் எண் அல்லது மெயில் ஐடியை பயன்படுத்தி இந்தச் செயலியில் உள்நுழைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலியில் உள்ள அம்சங்கள்
இந்தச் செயலியில் உள்ள அம்சங்கள் (google play store)

பயணிப்பவர்களுக்கு பல வழிகளில் உதவக் கூடிய இந்தச் செயலி உங்கள் போனில் இருப்பது நல்லது.

இந்த லிங்க்கை கிளிக் செய்து இந்தச் செயலியை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.