Rameshwaram Cafe Blast: இட்லி ஆர்டர் செய்துவிட்டு எஸ்கேப் ஆன நபர்..! வெடிகுண்டு வெடித்தது எப்படி? வெளியான தகவல்
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபருக்கு 28 முதல் 30 வயது இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காலை உணவு நேரத்தில் வந்த அந்த நபர், ரவா இட்லிக்கு கூப்பன் வாங்கிவிட்டு சாப்பிடவில்லை என தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ராமேஸ்வரம் உணவகத்தில் குறைந்த தீவிரம் கொண்ட ஐஇடி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், மதிய உணவு நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, "குண்டுவெடிப்பை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு 28 முதல் 30 வயது இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காலை உணவு நேரத்தில் கஃபேக்கு வந்த அந்த நபர், ரவா இட்லிக்கு கூப்பன் வாங்கியுள்ளார். ஆனால் அவர் இட்லி சாப்பிடாமல் வெளியேறியுள்ளார்.
அவர் வெடிகுண்டு வைத்திருந்த பையை உணவகத்தில் விட்டு சென்றுள்ளார். இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்னர் ஒரு மணி நேர டைமர் செட் செய்யப்பட்டிருந்தது" என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு நடந்தது எப்படி?
குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஒரு பையுடன் வரும் நபர் இட்லி சாப்பிடுவதற்கு கூப்பனை வாங்கிய பின் சாப்பிடாமல் பையை மட்டும் விட்டு சென்று வெளியேறியுள்ளார். குறைவான தீவிரத்தையும் தாக்கதையும் கொண்ட இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு முன் எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும் என அந்த நபர் டைமரை செட் செய்திருந்தார்.
கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் சிலருடன் அமர்ந்திருந்த பெண் ஒருவருக்கு பின்னால் அந்த பை இருந்துள்ளது.
மதியம் 1 மணிக்கு முன்னதாக வெடிகுண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் சுமார் 1.08 மணிக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக தங்களுக்கு அழைப்பு வந்தது என தீயனைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயனைப்புதுறையினர் சென்றனர். ஆனால் அப்போது அங்கு தீ பற்றி எரியவில்லை. இருப்பினும் தீயனைப்பு துறை அதிகாரிகள் உணவகத்தில் இருந்த எல்பிஜி கேஸ் சிலிண்டர்களில் கசிவு ஏதும் உள்ளதா என்பதையும் சோதித்து பார்ததுள்ளனர்.
உணவகத்துக்கு வெளியே காத்திருந்தபோது, இந்த விபத்தை நேரில் பார்த்த நபர் கூறியதாவது: " பலத்த சத்தம் கேட்ட நிலையில் உணவகத்தின் உள்ளே இருந்து சுமார் 30 முதல் 40 நபர்கள் அவசரமாக வெளியேறினர். அப்போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்டது.
உடனடியாக ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், மீட்பு பணிகள் நடந்தன" என்றார்.
இரவு வரை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இதற்கிடையே குண்டுவெடிப்பை ஏற்படுத்திய நபர் ஹைதராபாத் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பட்ட நிலையில், ஹைதராபாத் போலீசார் இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து நகரின் மையப்பகுதியில் நடந்திருக்கும் இந்த நிகழ்ந்திருப்பது போலீஸ், உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது என எதிர்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9