தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Hijab Case And Other Trending News For National And World On September 22

Hijab case: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - முக்கிய செய்திகள் (செப்.22)

Karthikeyan S HT Tamil
Sep 22, 2022 06:32 PM IST

ஹிஜாப் வழக்கு, காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பும் வன்முறை மற்றும் வெறுப்புக்கு எதிரானதே என்னுடைய இந்த நடைப் பயணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

பிகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை பேணி பராமரிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் ரூ. 2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஹனுமன் கோயில் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்துக்கள் எப்படி ‘காஃபிர்’ (நம்பிக்கை இல்லாதவர்கள்) ஆக முடியும்? என இஸ்லாமிய அமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் சவாய் மாதோபூரில் அடையாளம் தெரியாத மர்ம கும்பம் ஏடிஎம் இயந்திரத்தோடு, ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் சாராயம் குடிக்கப்பணம் தராத தாயை குடிகார மகன் உயிரோடு எரித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நிர்வாணமான நிலையில் சிறுமி ஒருவர் நடந்து சென்ற வீடியோ வெளியான நிலையில், ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பை சிவாஜி பார்க்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிவசேனாவின் தசரா பேரணிக்கு, அக்கட்சியின் இரண்டு அணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களை நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை” என்று வடகொரியா விளக்கமளித்துள்ளது.

மெக்சிகோவில் மற்றொரு கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐ.நா அடிப்படைக் கொள்கைகளை சிறிதும் வெட்கமின்றி மீறியுள்ளது ரஷ்யா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்ந்து கடுமையாக மீறப்படுவதாக ஐ.நாவில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவங்களில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 பைசா சரிந்து வரலாறு காணாத அளவில் 80.86 காசுகளாக நிறைவடைந்தது.

இனி எந்த அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றப் போவதில்லை என தோ்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,443 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

IPL_Entry_Point

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்