4 வயதில் தந்தை இறந்தார்.. ஆதரவற்ற இல்லத்தில் வாழ்க்கை.. டோமினிக் பீட்சா டோமினோஸ் பீட்சாவாக மாறிய கதை!
Domino's Pizza: இந்த டோமினோஸ் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளரான டாம் மோனகன் முழு பெயர் தாமஸ் ஸ்டீபன் மோனகன். அமெரிக்காவில் மெக்சிகன், ஆன் ஆல்பர் என்ற இடத்தில் பிறந்தவர்.
Domino's Pizza: டோமினோஸ் பீட்சா சாப்பிட்டவர்களுக்கு மறுமுறை சாப்பிட வைக்கும் அளவிற்கு பலருக்கும் ஏற்றவாறு சுவையோடு கிடைக்க கூடிய உணவுப் பொருள். பல லட்சம் ரசிகர்கள் இந்த உணவுக்கு உண்டு என்று கூறினால் அதற்கு ஏக்காது.
உலகம் முழுவதும் பறந்து கிடக்கும் டோமினோஸ் பீட்சா கிளைகள் பிறந்த கதை மிகவும் உத்வேகமாக இருக்கும். அதனை உருவாக்கிய டாம் மோனகன் எந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வந்தார் என்ற கதை தெரிந்தால் கடின உழைப்பு எவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.
குழந்தை பருவம்
இந்த டோமினோஸ் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளரான டாம் மோனகன் முழு பெயர் தாமஸ் ஸ்டீபன் மோனகன். அமெரிக்காவில் மெக்சிகன், ஆன் ஆல்பர் என்ற இடத்தில் பிறந்தவர். டாம் 4 வயது இருக்கும் பொழுது அவருடைய தந்தை இறந்து விடுகிறார். டாமுக்கு ஆறு வயது இருக்கும் பொழுது டாம் அவருடைய இளைய சகோதரர் ஜேம்ஸ் இருவரையும் தனியாக வளர்க்க முடியாத காரணத்தினால் இவர்களுடைய தாய் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருவரையும் சேர்த்து விடுகிறார்.
இந்த இரண்டு குழந்தைகளும் அங்கே வளர்கின்றனர். சிறிது காலம் கழித்து டாம் தாய் இவர்கள் பிள்ளைகள் இருவரையும் அழைத்து வந்து வளர்க்கின்றார். டாமுக்கு சிறுவயதில் இருந்து ஒரு ஆசை. தாமுரு மிகப்பெரிய கட்டிடக்கலைஞர் ஆக வேண்டும் என்பதுதான்.
ஒரு மிகப்பெரிய கட்டட கலைஞராக மாற வேண்டும். அவர் காலகட்டத்தில் அமெரிக்காவில் பிராங்க் லாய்டு ரைட் என்ற கட்டிடக்கலைஞர் மிகப்பெரிய அளவில் உச்சத்தில் அங்கு கொடிகட்டி பறக்கிறார். அவரைப்போல தானும் மிகப்பெரிய கட்டடக் கலைஞராக மாற வேண்டும் என டாம் நினைக்கின்றார்.
இந்த அமெரிக்காவில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற கட்டடங்கள் அனைத்தும் தன்னால் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என எண்ணுகிறார் டாம். இந்த ஆசையோடு ஏகப்பட்ட சிரமங்களை அனுபவிக்கின்றார். மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைத் துறையில் சேர்க்கின்றார். இருப்பினும் அவரிடம் பணம் இல்லை. அதன் காரணமாக என்னென்ன வேலை கிடைக்கின்றதோ அதை அனைத்தையும் செய்கின்றார்.
பீட்சா
அமெரிக்காவில் மெக்சிகனில் 1960 ஆம் ஆண்டு ஒரு சிறிய பீட்சா கடை விற்பனைக்கு வருகிறது. டாம் மற்றும் அவருடைய சகோதரர் ஜேம்ஸ் இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டுகின்றனர். 900 டாலருக்கு அந்த கடை விற்பனைக்கு வருகிறது. இருவரும் அந்த கடையை வாங்கி நடத்த முடிவு செய்கின்றனர்.
அந்த பீட்சா கடையின் பெயர் டோமினிக்ஸ். ஒரு தொழில் ஆரம்பித்த உடனே வெற்றி கண்டு விடுமா என்ன?. அதேபோல இந்த தொழிலும் பல சிக்கல்களை சந்திக்கின்றன. இதனால் சகோதரர் இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்படுகின்றது. டாம் தம்பியான தாமஸ் உன்னை போல் என்னால் உழைக்க இயலாது. என்னுடைய பங்கை கொடுத்து விடு நான் ஒதுங்கி விடுகிறேன் என தாமஸ் கூறியுள்ளார்.
உடனே டாம் தனது பழைய கார் ஒன்றை இளைய சகோதரர் தாமஸிடம் கொடுத்துவிடுகிறார். இப்போது அந்த கடைக்கு டாம் மட்டும் ஒரே ஒரு உரிமையாளராக மாறுகிறார். அதன் பின்னர் டாம் இந்த தொழில் ஏன் நஷ்டத்தில் செல்கிறது என தேடுகின்றார்.
அந்த கடையில் இருந்த அனைத்து விதமான மற்ற உணவுகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு பீட்சாவில் என்னென்ன வித்தியாசங்கள் கொடுக்க முடியும் என சிந்திக்கிறார். அதனை செய்து விற்கவும் செய்கிறார்.
1965 ஆம் ஆண்டு டோமினிக்ஸ் என்ற பெயரில் இருந்த கடையின் பழைய பெயரை டோமினோஸ் என மாற்றுகிறார். புதிய புதிய திட்டங்களை தீட்டி விரைவில் உங்கள் வீட்டை தேடி வரும் பீட்சா என அறிவிக்கின்றார். இதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
நாம் ஆர்டர் கொடுத்தால் பீட்சா வீட்டிற்கு வருமா என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். வீட்டிற்கே வந்து கொடுக்கின்ற காரணத்தினால் இந்த பீட்சா சூடாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றார் டாம். உடனே அதற்காக பிரத்தியேகமாக ஒரு அட்டைப்பெட்டியை உருவாக்குகிறார்.
பல புதுமைகளை செய்த டாம் அதே ஆண்டில் இரண்டு டோமினோஸ் பீட்சா கிளைகளை தொடங்குகிறார். அந்த சமயத்தில் அவர் தொடங்கிய முதல் பீட்சா கடை தீ விபத்தில் 95% விழுக்காடு சேதத்தில் அழிந்து விடுகிறது. சிறு வயது முதல் பல சங்கடங்களை சந்தித்து வந்த டாம் இது கண்டு அஞ்சவில்லை.
அடுத்தடுத்து தனது கடின உழைப்பை கொடுத்து பல்வேறு விதமான டோமினோஸ் பீட்சா கிளைகளை டாம் உருவாக்குகிறார். ஆனால் அவருடைய முதல் மூன்று கடை தான் முழு முதல் ஆதாரமாகும்.
டோமினோஸ் பீட்சா லோகோவில் மூன்று புள்ளிகள் இருப்பதை காண முடியும். அவருடைய ஆதாரமான மூன்று கிளைகளில் அடையாளம் தான் அந்த மூன்று புள்ளிகள். டாமின் அடையாளமாக இருந்த மூன்று கிளைகள் அவருடைய நிறுவனத்தின் அடையாளமாக மாறியது.
உலக அளவில் டோமினோஸ்
1970 ஆம் ஆண்டு பல சிக்கல்களை தான் சந்திக்கின்றார். அனைத்தையும் சரி செய்கின்றார். அதன் காரணமாக அரை மணி நேரத்தில் உங்கள் வீடு வந்து பீட்சா சேரும் என ஒரு அறிவிப்பை டாம் வெளியிடுகிறார். ஒரு நொடி அதிகமானால் கூட நீங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என கூறுகிறார். உலக அளவில் இது பரபரப்பாகின்றது. அப்போது தான் 200 கிளைகள் மட்டும் தன் வசம் வைத்திருக்கிறார். அந்த விளம்பரம் தான் உலகம் முழுவதும் பல பீட்சாக்களை சாப்பிட வைத்தது.
அமெரிக்காவில் பிடித்த உணவுகள் சாப்பிடும் பட்டியலில் டோமினோஸ் பீட்சா ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது. அதற்குப் பிறகு டோமினோஸ் பீட்சா அதிகம் சாப்பிடுபவர்கள் இடத்தில் இந்தியா உள்ளது. ஒரு நாளைக்கு பத்து லட்சம் பீட்சா டெலிவரி செய்யப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட 85 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை டோமினோஸ் பீட்சா வைத்திருக்கின்றது. ஒரு தனி மனிதனின் உழைப்பு தற்போது உலகத்தை ஆண்டு வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.
டாபிக்ஸ்