HBD Raghuram Rajan : முன்னாள் ஆர்பிஐ கவர்னர் மற்றும் பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன் பிறந்த தினம் இன்று!
HBD Raghuram Rajan : பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன் பிறந்த தினம் இன்று!
ரகுராம் ராஜன், சிகாகோ பூத்தில் நிதியியல் பேராசிரியராக உள்ளார். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின்ன 23வது கவர்னராக 2013ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2016 செப்டம்பர் வரை பணிபுரிந்தார். சர்வதேச பண நிதியத்தின் முதன்மை பொருளியல் வல்லுனர் மற்றும் இயக்குனராக இருந்தார்.
இவர் வங்கியியல், கார்பரேட் நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தி தர்ட் பில்லர் – ஹவ் தி ஸ்டேட் அண்ட் மார்க்கெட்ஸ் ஹோல்ட் தி கம்யூனிட்டி பிஹைண்ட் 2019 என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த புத்தகம் ஃபினான்சியல் டைம்ஸ் பிஸ்னஸ் புக் ஆஃப் தி இயர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர் எழுதிய மற்றொரு புத்தகம் ஃபால்ட் லைன்ஸ் – ஹவ் ஹிடன் ஃப்ராக்சர்ஸ் ஸ்டில் திரட்டன் தி வேர்ல்ட் எக்கானமி, 2010ம் ஆண்டு ஃபினான்சியல் டைம்ஸின் அந்தாண்டு சிறந்த புத்தக விருதை பெற்றது.
அமெரிக்க பொருளாதார சங்கத்தின் தலைவராக 2011ம் ஆண்டு இருந்தார். அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினர். 2003ம் ஆண்டு முனைவர்.ராஜனுக்கு 40 வயதுக்குள் உள்ள சிறந்த பொருளாதார ஆராய்ச்சியாளர் விருதை கொடுத்தது.
இவர் 2012ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்காக இன்ஃபோசிஸின் பரிசு, 2013ம் ஆண்டில் நிதி பொருளாதாரத்தின் டட்சே பேங்க் பரிசை வென்றார். இவர் மேலும் பல்வேறு உயரிய விருதுகளைப்பெற்றுள்ள பொருளாதார மேதை ஆவார்.
இவர் அண்மையில் தி டிக்லைன் ஆஃப் செக்யூர்ட் டெபிட் என்ற புத்தகத்தை எஃப்ரைம் பென்மெலெச் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து எழுதி வெளியிட்டார். அவர்களுடன் மற்றொரு புத்தகம் செக்யூர்ட் கிரெடிட்ஸ் வரவுள்ளது. இன்னும் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவர், மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் 1963ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி பிறந்தார். இவரது தந்தை இந்திய உளவுத்துறை அமைப்புக்களான ரா மற்றும் ஐபி போன்றவற்றில் பணிபுரிந்தார். இதனால் இவர் பல்வேறு நாடுகளிலும் வசித்துள்ளார். பின்னர் 1974ம் ஆண்டு முதல் டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்தார்.
பின்னர் ஐஐடி டெல்லியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்க படித்தார். கல்லூரியில் இவர் கல்லூரி மாணவர் கவுன்சிலில் இடம்பெற்றார். இவர் அதில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவர். பின்னர் ஐஐஎம் அஹமதாபாத்தில் எம்பிஏ படித்தார். அங்கும் தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சி பெற்றார்.
பின்னர் டாடா குழுமத்தில் மேலாண்மை பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் தனமு முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1991ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு லண்டன் பிஸினஸ் ஸ்கூல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களும் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர், பேராசிரியர், ஆர்பிஐயின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற பெருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் பிறந்தநாளில் அவரை ஹெச்டி தமிழ் வாழ்த்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்