HBD Rajiv Gandhi: டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கிய முதல் பிரதமர்! இளைஞர்களே இவரது நம்பிக்கை!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Rajiv Gandhi: டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கிய முதல் பிரதமர்! இளைஞர்களே இவரது நம்பிக்கை!

HBD Rajiv Gandhi: டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கிய முதல் பிரதமர்! இளைஞர்களே இவரது நம்பிக்கை!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 20, 2023 05:00 AM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ராஜீவ் காந்தி பிறந்த நாள்
ராஜீவ் காந்தி பிறந்த நாள்

இந்திய வரலாற்றில் இருந்து தவிர்க்க முடியாத பிரதமர் இவர். இந்திய நாட்டின் ஆறாவது பிரதமராக பதவி வகித்தவர். இவருடைய பிறந்தநாள் நல்லிணக்க தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நல்லிணக்க தினம் அனைத்து மதத்தினருக்கும் அமைதி, தேசிய ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அதன் பின்னர் இந்தியாவில் இளைய பிரதமராக ராஜீவ் காந்தி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார்.

ஐந்தாண்டு பதவி வகித்த ராஜீவ் காந்தி பல்வேறு வகையான சீர்திருத்தங்களை செய்துள்ளார். இந்தியாவில் உயர் கல்வியை நவீன மயமாக்குவதற்காக 1986 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையில் அறிவித்தார்.

பொதுமக்களும் முடிவெடுக்க அதிகாரம் உண்டு என்பதை உணர்த்துவதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவித்தார். கணினி மயமாக மாற வேண்டும் என தொழில் நுட்பத்தை இந்திய நாட்டுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய பங்காற்றினார்.

இந்திய நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக ஜவகர் ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிக இளைஞர்கள் நாட்டிற்கு பங்களிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக வாக்கு உரிமையின் வயதை 21 வயதிலிருந்து 18 வயதாக குறைத்தார்.

கிராமப்புற மக்களை வெளி உலகத்தோடு இணைக்கும் வகையில் PCO அதாவது பொது அழைப்பு அலுவலகங்களை உருவாக்கினார்.

இந்திய ரயில்வே துறையில் பயணிகள் அதிகம் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கணினி மயமாக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவில் தொழில் நுட்பமாக மாற்ற வேண்டும் என்பதற்காக கணினிகள், விமான நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் செய்யப்படும் வரி மற்றும் கட்டணங்களை குறைத்தார்.

இந்திய நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய தொழில்நுட்பம் மிக முக்கியமான கருவி ராஜீவ் காந்தி அதற்கான அத்தனை வேலைகளையும் செய்தார். டிஜிட்டல் இந்தியாவாக நமது நாட்டை மாற்ற வேண்டும் என்பதற்கு பல்வேறு விதமான சாதனைகளை செய்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியின் 79 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா எந்த அளவிற்கு தொழில்நுட்பமாக மாறுகிறது அதற்கு இவருக்கு முக்கிய பங்கு உண்டு என்பது எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.