KOLKATA: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: முக்கியக் குற்றவாளி சஞ்சய் ராய் மீது உண்மை கண்டறியும் சோதனை தொடக்கம்!
KOLKATA: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: முக்கியக் குற்றவாளி சஞ்சய் ராய் மீது உண்மை கண்டறியும் சோதனை தொடக்கம் ஆகியுள்ளது.
KOLKATA: கொல்கத்தா அரசு நடத்தும் ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் முக்கியக்குற்றவாளி மற்றும் ஆறு பேர் மீதான உண்மை கண்டறிதல் சோதனைகள் இன்று(ஆகஸ்ட் 24) தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கியக் குற்றவாளியான சஞ்சய் ராய் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் பாலிகிராஃப் சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் சந்தீப் கோஷ் கூறுகையில், சம்பவம் நடந்த இரவில் பணியில் இருந்த நான்கு மருத்துவர்கள் மற்றும் ஒரு சிவில் தன்னார்வலர் உட்பட மீதமுள்ள ஆறு பேர் ஏஜென்சி அலுவலகத்தில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திலிருந்து (சி.எஃப்.எஸ்.எல்) பாலிகிராஃப் நிபுணர்கள் குழு சோதனைகளை நடத்த கொல்கத்தா சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டை அதிரச் செய்த மருத்துவ மாணவி கொலைவழக்கு:
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் ஒரு முதுகலை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மூடிமறைக்க முயற்சி நடந்ததாகத் தெரிவித்தது. ஏனெனில் உள்ளூர் போலீசார் மற்றும் உள்ளூர் ஆய்வு முகமை விசாரணையை எடுத்துக்கொள்வதற்கு முன்பு, குற்றம் நடந்த இடத்தை மாற்றியமைத்தனர்.
மருத்துவமனை கருத்தரங்க அரங்கில் இளநிலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவலான போராட்டங்களைத் தூண்டியுள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை மருத்துவமனையின் மார்புத் துறையின் கருத்தரங்கு மண்டபத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மறுநாள் இந்த கொலையில் தொடர்புடைய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று, கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரணையை கொல்கத்தா காவல்துறையிடமிருந்து, சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.
சிபிஐ-க்கு வழக்கு மாற்றம்:
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) இன்று(ஆகஸ்ட் 24) ஒப்படைத்ததாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோஷ் சம்பந்தப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையை மாநில சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு இடமிடருந்து சிபிஐக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாற்றியது.
மேலும், பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கின் ஒரு பகுதியாக ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பாதுகாப்பை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு (சி.ஐ.எஸ்.எஃப்) மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் நடந்து வரும் மாணவப் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பணியாளர்களை நிறுத்துவது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்தில் பயிற்சி மருத்துவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து இதுதொடர்பாக மருத்துவ மாணவர்கள் நாடு முழுவதும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையை செய்திகள்