Fact Check: 2024 தேர்தலுக்கு நடுவே காங்கிரஸ் கட்சியை பாராட்டினாரா ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!
நடந்து வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடையே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூற்று உண்மையாக என FACTLY செய்திக் குழு சரிபார்த்துள்ளது.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பை ஒரு உரையின் போது நினைவு கூர்ந்ததாகக் கூறும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நடந்து வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடையே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூற்று உண்மையாக என FACTLY செய்திக் குழு சரிபார்த்துள்ளது.
கூற்று: 2024 லோக்சபா தேர்தலுக்கு இடையே, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், சுதந்திர இயக்கத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் பங்காற்றியது என தெரிவித்தார் என தகவல் பரவி வருகிறது.
உண்மை: இது 2018 இன் பழைய வீடியோ, சமீபத்தியது அல்ல. செப்டம்பர் 2018 இல் புது டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வின் போது மோகன் பாகவத் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தற்போது அவர் பேசவில்லை.