MLC Kavitha: தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா ED முன் 3வது தடவை விசாரணைக்கு ஆஜர்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mlc Kavitha: தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா Ed முன் 3வது தடவை விசாரணைக்கு ஆஜர்

MLC Kavitha: தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா ED முன் 3வது தடவை விசாரணைக்கு ஆஜர்

Manigandan K T HT Tamil
Mar 21, 2023 12:15 PM IST

Enforcement Directorate: இந்தக் கொள்கை மூலம் மது விற்பனைக்கு உரிமம் பெற லஞ்சம் கொடுத்து சில முகவர்கள் பலனடைந்ததாகவும் கூறப்படுகிறது.

டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வந்த எம்எல்சி கவிதா
டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வந்த எம்எல்சி கவிதா (PTI)

கூடுதல் விசாரணைக்காக இன்று மீண்டும் ஆஜராகும்படி அவரிடம் அமலாக்கத் துறை அறிவுறுத்தியது. அதன்படி இன்று அவர் ஆஜராகியுள்ளார்.

டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக் கொள்கை மூலம் மது விற்பனைக்கு உரிமம் பெற லஞ்சம் கொடுத்து சில முகவர்கள் பலனடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கவிதாவுக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை.

அதன்படி கடந்த 11ஆம் தேதி அமலாக்கத் துறை முன் ஆஜரானார் கவிதா. அதைத் தொடர்ந்து நேற்றும் ஆஜரானார். நேற்று அவரிடம் 10 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு அவர் மீண்டும் ஆஜரானார்.

அமலாக்கத் துறை முன் அவர் ஆஜராவது இது மூன்றாவது முறையாகும்.

நேற்றைய தினமே அவரிடம் 10-க்கம் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அந்தக் குழுவில் அரவிந்தோ ஃபார்மா நிறுவனர் சரத் ரெட்டி, கவிதா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றதாகவும் அமலாக்கத் துறை தெரிவிக்கிறது.

சர்ச்சைக்குள்ளான இந்த மதுபானக் கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது.

டெல்லி துணை நிலை ஆளுநர் சிபிஐயிடம் இந்த விவகாரம் தெடார்பாக விசாரணை நடத்துமாறு பரிந்துரைத்ததை அடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.